“காலைல 5.10 இருக்கும், வேகமா எங்களை க்ராஸ் பண்ணி போன கார் டிவைடர்ல இடிச்சு.. கஷ்டப்பட்டு வெளிய இழுத்தோம் – ரிஷப் பண்ட்டை உயிரோடு மீட்ட டிரைவர் பேட்டி!

0
397

விபத்து நடந்த இடத்திலிருந்து ரிஷப் பண்ட்டை எப்படி கப்பற்றினோம் என பஸ் டிரைவர் சுஷில் குமார் பேட்டி அளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து டேராடூன் அருகே உள்ள சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட், அதிகாலை 5.10 மணியளவில் தூக்க கலக்கத்தில் வேகமாக வண்டியை ஓட்டியதால் நிலை தடுமாறி நடுவில் இருந்த டிவைடரில் மோதியதால் கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.

- Advertisement -

உடனடியாக அந்த வழியாக சென்ற பஸ் டிரைவர் கார் தீப்பிடித்து எறிவதற்கு முன்னரே அதிர்ஷ்டவசமாக ரிஷப் பணட்டை காரிலிருந்து வெளியே எடுத்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உறிய உதவிகளை செய்தார்.

பஸ் டிரைவர் சுஷில்குமார் மற்றும் அவரது நடத்துனர் இருவரும் இந்த காரியத்தை செய்யவில்லை என்றால் தற்போது ரிஷப் உயிருடனே இருந்திருக்க மாட்டார். பல வதந்திகள் பரவி வரும் நிலையில் உண்மையில் ரிஷப் பண்ட் எப்படி விபத்திற்கு உள்ளானார்? எப்படி அவரை காப்பாற்றினோம்? என்பது பற்றி பேட்டி அளித்துள்ளார் சுசில் குமார்.

தினமும் நான் ஹரிதுவாரிலிருந்து காலை நான்கரை மணி வாக்கில் எனது பேருந்தை எடுப்பேன். அதேபோல அன்று காலை எடுத்து சென்று கொண்டிருந்தபோது 5.10 மணி அளவில் ஒரு கார் ஒன்று வேகமாக எங்களை கடந்து சென்றது. அப்போது நிலை தடுமாறி நடுவில் இருந்த டிவைடரில் மோதி டெல்லி நோக்கி செல்லும் பாதைக்கு சென்று கவிழ்ந்தது.

- Advertisement -

எனது பேருந்தை அடுத்த நிமிடமே நிறுத்திவிட்டு நானும் எனது நடத்துனரும் விபத்துக்குள்ளான கார் நோக்கி சென்றோம். உள்ளே ரிஷப் பன்ட் இருந்தார். அவரை வெளியே எடுக்க முயற்சித்தோம் எங்கள் இருவரால் முடியவில்லை என்பதால் அருகில் இருந்த சிலரை உதவிக்கு அழைத்தோம். இறுதியில் அவரை வெளியில் எடுத்து ஒரு ஓரமாக போர்வை போர்த்தி உட்கார வைத்தோம்.

‘நன்றாக இருக்கிறீர்களா..’ என்பதை உறுதி செய்த பிறகு அவருக்கு தண்ணீர் கொடுத்து சாந்தப்படுத்தினோம். அப்போது அவர் எங்களிடம் நான் ரிஷப் பன்ட் என்று கூறினார். எனக்கு யார் என்பது தெரியவில்லை. ஏனெனில் நான் கிரிக்கெட்டுகளை அவ்வளவாக பார்ப்பதில்லை. எனது பக்கத்தில் இருந்த சிலர்தான் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் என கூறினார்கள்.

அப்போது அவர் தனது அம்மாவின் நம்பரை கொடுத்தார். போன் செய்து பார்த்தால் அது தொடர்பில் இல்லை என வந்தது. இனியும் காலதாமதம் செய்தால் சரி வராது என ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவைத்தேன். அடுத்த பத்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது அவரை ஏற்றி அனுப்பிவிட்டோம். செய்திகளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் தற்போது நன்றாக இருக்கிறார் என்று. இறைவனுக்கு நான் நன்றியை கூற கடமைப்பட்டிருக்கிறேன்.” என்றார்.