“தம்பிகளா நீங்க ரெண்டு பேரும் இதை மறந்துட்டிங்க!” – ரோகித் பாபர் அசாமுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை!

0
775
Gavsskar

இந்த முறை நடக்க இருக்கும் ஆசியக் கோப்பைத் தொடர் கடந்த முறை போல் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராக இந்த ஆசியக் கோப்பை தொடர் மிக உதவியாக இருக்கும்!

மேலும் இந்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த முறை ஆசியக் கோப்பை தொடரை நடத்துவதற்கு உரிமை பெற்ற இருந்த பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல மறுத்துவிட்டது. இதன் காரணமாக ஹைபிரிட் முறையில் இரு நாடுகளில் நடத்தப்படுகிறது.

- Advertisement -

ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் அணைகள் இருக்கின்றன. இரண்டாவது குழுவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு குழுவில் இருக்கும் அணிகளும் தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். இந்த முதல் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இரண்டு அணிகள் வெளியேறும்.

இரண்டாவது சுற்றில் நான்கு அணிகளும் ஒவ்வொரு அணிவுடனும் ஒரு போட்டியில் விளையாடும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டியில் ஆசிய சேம்பியன் அணி வெளிவரும்.

- Advertisement -

நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் மோதிக் கொள்கின்ற வாய்ப்பு இருக்கிறது. இறுதிப்போட்டியில் சந்தித்தால்மூன்றாவது போட்டியிலும் மோதும். இதன் காரணமாக இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆசியக் கோப்பையில் நாம் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் இலங்கையும் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். மேலும் அவர்கள் கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையை வென்று இருக்கிறார்கள். இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஆன போட்டி எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது.

உலகக் கோப்பைக்கு எந்த அணிகள் அரையிறுதிக்கு வரும் என்றால், நான் இந்திய அணி அரையிறுதிக்கு வருவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறேன். மற்ற அணிகள் குறித்து எனக்கு எந்த விருப்பமும் கவனமும் கிடையாது.

வீரர்கள் தங்களுடைய பணிச்சுமைகளை நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் உடல் பற்றி அறிவார்கள். பிசியோதெரபிஸ்டுகளுக்கும் தெரியும். உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் வீரர்களுக்கும் தெரியும். அந்த நிலையில் அந்த வீரர் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் அவருக்கு மூன்று நான்கு நாட்கள் ஓய்வு கொடுக்கவில்லை என்றால் காயம் மேலும் பெரிதாகும். பிரச்சனையும் பெரிதாகும்!” என்று கூறி இருக்கிறார்!