ஆயிரம் விக்கெட் ; அசாத்திய சாதனை ; ஆஸ்திரேலிய கூட்டணி சாதனையை முறியடித்த இங்கிலாந்து கூட்டணி!

0
1281

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது .

அந்த அணியின் ஹாரி ப்ரூக்ஸ் சிறப்பாக ஆடி 89 ரன்களையும் பென் டக்கெட் 84 ரன்களையும் எடுத்தனர் . இதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 37 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது . இன்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 306 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

- Advertisement -

அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பிளண்டல் அபாரமாக ஆடி 138 ரன்களை எடுத்தார். இதில் 19 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம் . இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ராபின்சன் நான்கு விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் . ஜாக் லீச் .ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் .

இந்தப் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஜோடியான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து 1001 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கின்றனர் . இதன் மூலம் இவர்கள் ஆஸ்திரேலியா அணியின் ஷேன்
வார்ன் மற்றும் மெகராத் ஜோடி சாதனையை சமன் செய்துள்ளனர் .

104 போட்டிகளில் இணைந்து ஆடிய ஷேன் வார்ன் மற்றும் மெக்ராத் ஜோடி 1001 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் களை வீழ்த்திய பந்து வீச்சு ஜோடி என்ற சாதனையை புரிந்து இருந்தது . இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாக்னரின் விக்கெட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை சமன் செய்திருக்கிறது ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஜோடி . இவர்கள் 133 போட்டிகளில் இணைந்து விளையாடி 1001 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . முத்தையா முரளிதரன் மற்றும் வாஸ் ஆகியோர் 895 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய இங்கிலாந்து அணி 79 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. போப் 14 ரன்கள்டனும் ஸ்டூவர்ட் பிராட் 6 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் . இங்கிலாந்து அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது .