கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா.. அப்ப வேர்ல்ட் கப் டீம்ல இந்த மும்பை இந்தியன்ஸ் பிளேயர எடுங்க – இந்திய அணிக்காக அஸ்வின் போட்ட பக்காவான ஸ்கெட்ச்.!

0
946

50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற இருக்கிறது. பத்து நாடுகள் கலந்து கொள்ளும் உலகச் சாம்பியன் பட்டத்திற்கான முதலில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற இருக்கும் இந்த போட்டி தொடரின் முதல் போட்டி குஜராத்தின் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆன நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இந்த உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் அணிகளின் வீரர்கள் பட்டியலை வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் ஐசிசி இடம் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் உலககோப்பையில் பங்குபெறும் அனைத்து நாடுகளும் தங்களது அணிக்கான தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்திய அணியை பொறுத்தவரை உலகக் கோப்பை காண அணியில் நான்காவது இடத்தில் ஆடும் வீரர் மற்றும் இடது கை ஆட்டக்காரர் ஆகிய இரண்டு விஷயங்கள் நீண்ட காலமாகவே ஒரு பலவீனமாக அமைந்திருக்கிறது. இந்த நான்காவது இடத்தில் ஆடுவதற்கான வீரராக ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணி தயார் படுத்தி வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் காயம் அடைந்து அணியில் இருந்து வெளியேறினார். காயத்திற்கான அறுவை சிகிச்சைக்கு பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தாலும் அவர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை.

இதனால் நாளாவது இடத்தில் ஆடுவதற்கான புதிய வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டு இருக்கிறது. அதற்கான பரிசோதனைகளும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இருந்தே நடைபெற்று வருகிறது. அது தற்போது நடைபெற்று வரும் டி20 போட்டிகளிலும் தொடர்கிறது. கடந்த உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி நான்காவது இடத்தில் இறங்கும் வீரருக்கான தெளிவான திட்டமிடலுடன் போட்டிகளை அணுகாததால் அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியில் நான்காவது யாரை களம் இறக்கலாம் என இந்திய அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் அஸ்வின் ” வர இருக்கின்ற உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர் திலக் வர்மாவை உலகக் கோப்பை காண இந்திய அணியில் சேர்ப்பது பற்றி யோசிப்பார்களா? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய அணியில் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இடது கை ஆட்டக்காரராக இருக்கிறார். சஞ்சு சாம்சன் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் திலக் வருமா ஒரு இடது கை ஆட்டக்காரராக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒரு விஷயமாக அமையும்” என்று கூறினார்.

மேலும் இதைப்பற்றி தொடர்ந்து பேசிய அஸ்வின் ” நீங்கள் மற்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் விரல்களை பயன்படுத்தி பந்து வீசக்கூடிய பின்னர்கள் குறைவான அளவில் இருக்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசக்கூடிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தான் அதிக அளவில் உள்ளனர். இதனால் இடது கை ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம் பெறுவது அணிக்கு மிகப்பெரிய சாதகமான விஷயமாக அமையும். மேலும் கிழக்கு வர்மா பந்தும் வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நம்முடைய கேள்வி என்றால் இந்திய அணி அவரையும் ஒரு தேர்வாக பார்க்குமா?, என்பதுதான் , தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலேயே அனைவரையும் அவர் கவனிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணிக்கு தேவையான தற்செயல் திட்டமாகவும் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று இந்திய உலகக்கோப்பை அணியில் திலக் வர்மாவை சேர்ப்பதற்கான தேவை இருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின் .