ஐபிஎல் இல் இருந்து ஓய்வை அறிவித்த ட்வெயின் பிராவோ – சிஎஸ்கே அணியில் கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு

0
432

சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான பிராவோ நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை . இதுகுறித்து பல்வேறு அனுமானங்களும் வந்து கொண்டிருந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . இந்த அறிவிப்பை அடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது .

இந்த செய்தி தொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிராவோ சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்படுவார். இதற்கு முன் பயிற்சியாளராக இருந்த லட்சுமிபதி பாலாஜி தனது சொந்த காரணங்களால் இந்த ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் இதனை அடுத்து சிஎஸ்கே நிர்வாகம் பிராவோ வை தங்களது புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது .

- Advertisement -

இது பற்றி கூறிய பிராவோ “நான் பந்துவீச்சார்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே விரும்புவேன் சென்னை அனையுடன் இணைந்து என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவங்க காத்துக் கொண்டிருக்கிறேன் “என்று கூறினார் ,

மேலும் அவர் பயிற்சியாளர்களின் பணி பற்றி கூறும் பொழுது ” ஒரு வீரராக இருந்து பயிற்சியாளராக மாறுவது எனக்கு ஒன்றும் கடினமான விஷயம் இல்லை ஏனென்றால் நான் வீரராக இருக்கும் பொழுது தந்திவீச்சாளர்களுடன் இணைந்து ஆட்டத்திற்கான திட்டங்களை வகுத்திருக்கிறேன் . அதனால்தான் பயிற்சியாளராக எதையும் புதியதாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்னுடைய பணியில் சிறப்பாக செயல்படுவேன் “என்று கூறினார்

தன்னுடைய ஐபிஎல் கேரியர் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” நான் முதல் முதலாக ஐபிஎல் ஆடும் பொழுது என்னுடைய கிரிக்கெட் வாழ்வினை ஐ பி எல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரனாக கொடுப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை ஐபிஎல் வரலாற்றில் என் பெயர் இடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியான தருணம் “என்று கூறினார் ,

- Advertisement -

பிராவோ ஐபிஎல் இன் முதல் மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் 2011 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காகவும் ஆடியுள்ளார் . மொத்தம் 161 போட்டியில் ஆடி உள்ள பிராவோ 183 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார் . ஆல்ரவுண்டர் ஆன பிராவோ 1560 ரண்களையும் சேர்த்துள்ளார் .. இவரது ஸ்ட்ரைக் ரேட் 130 ஆகும் .

2011,2018 மற்றும் 2021 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியவர் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது . இவர் தான் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் கேப்பை2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை கைப்பற்றியும் சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .