இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ரிஷப் பண்ட் மற்றும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி இருவரும் மிக முக்கியமான பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹேடின் கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி அதிவேக ஆடுகளத்தை கொண்டிருக்கும் பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதை ஒட்டி ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து வருகிறார்கள்.
முதல் இரண்டு டெஸ்டில் காத்திருக்கும் சவால்
இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிவேக ஆடுகளங்களை கொண்ட பெர்த் மற்றும் அடிலெய்ட் ஆடுகளத்தில் விளையாட இருக்கிறது. இந்தியா பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா சூழ்நிலைக்கும் பழகுவதற்கு முன்பாகவே அவர்களை திட்ட வைப்பதற்காக பெர்த் மைதானத்தில் தொடரை தொடங்குகிறார்கள் என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வந்திருக்கின்ற காரணத்தினால், இந்த முறை எப்படியும் சொந்த மண்ணில் வைத்து இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறந்த முறையில் தயாராகி வருகிறது.
இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிக்க முடியாது
இதுகுறித்து பிராட் ஹேடின் கூறும் பொழுது “இந்திய பேட்டர்கள் எங்களின் வேகப்பந்து வீச்சுக்கு முன்னால் நிற்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஜெய்ஸ்வால் ஒரு நல்ல வீரர் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் இதற்கு முன்னால் ஆஸ்திரேலியா வந்து விளையாடியது கிடையாது. அதனால் அவர் பவுன்சை எவ்வாறு கையாள போகிறார் என்று தெரியவில்லை. பெர்த் மைதானத்தில் துவக்க வீரராக விளையாடுவது கடினம்”
இதையும் படிங்க : சூரியகுமார் கிட்ட இருந்து எனக்கு இந்த திறமை வேணும்.. ஆனா டி20-ல் இரட்டை சதம் அடிக்க போவது இவர்தான் – ஹென்றி கிளாசன் கணிப்பு
அதே சமயத்தில் இதுகுறித்து ஆரோன் பின்ச் கூறும் பொழுது “இரண்டு அணிகளிலுமே நல்ல வேகப்பந்து தாக்குதல் இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு அணிகளின் டாப் ஆர்டர்களுமே சீக்கிரத்தில் சரிவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே இந்திய அணியில் ஆறாவது இடத்தில் விளையாடும் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா அணியில் ஏழாவது இடத்தில் விளையாடும் அலெக்ஸ் கேரி இருவரும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.