வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் கொண்டுவந்துள்ள புதிய டி.ஆர்.எஸ் முறை

0
539
New DRS in BPL

இந்த ஆண்டின் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்தொடரில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்று விளையாடும். இந்த தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து முஷ்பிகுர் ரஹீம் ( 2274 ரன்கள் ) முதலிடத்தில் இருக்கிறார். அதே சமயம் 106 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சாளராக ஷகிப் அல் ஹசன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் மத்தியில் முதலிடத்தில் இருக்கிறார்.

அணிகளைப் பொறுத்தவரையில் தாக்கா அணி அதிகபட்சமாக இதுவரை மூன்று கோப்பைகளை கைப்பற்றி சிறந்த அணியாக விளங்குகின்றது.2019-2020 ஆண்டு கடைசியாக நடைபெற்ற பங்கிலாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் , ராஜ்ஷாகி ராயல்ஸ் அணி தன்னுடைய முதல் கோப்பையை கைப்பற்றி நடப்புச் சாம்பியன் அணியாக வலம் வருகிறது.

- Advertisement -

நடுவர்கள் கூறிவரும் முடிவுகள் தவறாக போய் முடிகிறது

இந்த தொடரில் தற்போது இரண்டு விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவரும் புஷ்பா திரைப்படத்தில் வரும் ஸ்ரீ வள்ளி பாடலில் அல்லு அர்ஜுன் ஆடுவது போல் உற்சாகமாக ஆடும் வீடியோ ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மறுபக்கம் தொடரில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் நிறைய முறை கள நடுவர்கள் கூறும் முடிவுகள் தவறாக போய் முடிந்துள்ளது. தற்பொழுது அதுவும் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதனை கண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம், வீரர்களுக்கு ஏற்றவாறு ஒரு புதிய டி ஆர் எஸ் முறையை கொண்டு வந்துள்ளது.

பொதுவாக டிஆர்எஸ் முறை வீரர்களுக்கு முக்கியமான நேரங்களில் கை கொடுக்கும். நடுவர்கள் கூறும் முடிவை திருத்தம் செய்து கொள்வதற்காக, அவர்கள் அந்த முறையை கையில் எடுப்பார்கள். அதேபோல தற்பொழுது ஆல்ட்டர் நேட்டிவ் டிஆர்எஸ் (ஏ டி ஆர் எஸ்) என்கிற புதிய முறையை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

- Advertisement -

இந்தப் புதிய முறைப்படி வீரர்கள் களத்தில் நடுவர்கள் கூறும் முடிவை சேலஞ்ச் செய்யலாம். இந்த முறைப்படி நடுவர்கள் கூறும் தவறான முடிவுகளை மாற்றி அமைத்துக் கொள்ள இது அவர்களுக்கு உதவும். பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் கொண்டு வந்துள்ள இந்த புதிய முறை அத்தொடரில் விளையாடும் வீரர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

2022ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் புள்ளி பட்டியல் நிலவரம்

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி அவ்விரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று கோமில்லா விக்டோரியன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

நான்கு போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், மினிஸ்டர் குரூப் தாக்கா அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திலும், குல்நா டைகர்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.