கேள்வி பதில் பதிப்பில் ஸ்டீவ் ஸ்மித் குறித்து பதிலளித்த டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் ஷம்ஸ் முலானி

0
272
Shams Mulani about Steve Smith

மும்பை அணியில் டொமஸ்டிக் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பின்னர் சர்வதேச அளவில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதன் காரணமாகவே இரஞ்சி டிராபி தொடரில் இன்று மும்பை அணி வெற்றிகரமான அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மும்பை அணியில் நிறைய இளம் வீரர்கள் வருடாவருடம் அனைவரின் கவனத்தையும் மிக எளிதில் ஈர்த்து விடுவார்கள்.

அதன் வரிசையில் 24 வயதான இடதுகை ஸ்பின் பந்து வீச்சாளரான ஷம்ஸ் முலானி தற்பொழுது அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்ட ஒரு பந்து வீச்சாளர். டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 11 பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள், 35 லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

பௌலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் இவர் கைதேர்ந்தவர் அதன் காரணமாகவே இதுவரை 1000 ரன்களுக்கு மேலாக அடித்தும் மற்றும் 100க்கும் அதிகமான விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக விளையாடி வரும் இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக டெல்லி அணியில் இவர் இணைந்திருந்தார்.

கடந்த ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய அனுபவங்களை கேள்வி மூலமாக இவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு இவரும் பதிலளித்துள்ளார்,அவர் அளித்த பதில்கள் குறித்து நாம் பார்ப்போம் :

முதலில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடிய அனுபவத்தை குறித்து ஒரு கேள்வி முன்னெடுத்து வைக்கப்பட்டது. அதற்கு அவர் “கடந்த ஐந்து வருடங்களாக விஜயசாரதி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறேன். மும்பை அணிக்காக விளையாடுவது எனக்கு எப்பொழுதும் பெருமை என்று கூறியுள்ளார்”.

விஜய் சாரே டிராபி தொடரைத் தொடர்ந்து தற்போது இரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் அனுபவம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்”டெஸ்ட் பார்மெட்டில் விளையாடுவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. இது மிகவும் கடினமான ஒரு பார்மெட். ஆனால் இந்த பார்மெட்டில் விளையாடுவது எப்பொழுதும் தனி உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும்.அதில்தான் தற்பொழுது விளையாடி வருவது பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்”.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் வீரர்கள் டெல்லி அணியில் பல்வேறு வீரர்கள் இருந்தாலும் உங்களுக்கு பிடித்த வீரர் மற்றும் உங்களுடைய மறக்க முடியாத தருணம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. “அதற்கு அவர் ஸ்டீவ் ஸ்மித் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும் அவருக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் பந்துவீசிய தருணத்தை நான் செய்த சாதனையாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்”.

ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட நான் ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

டெல்லி வீரர் மற்றும் மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா உடனான அனுபவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே என்னிடம் பழகுவார். மும்பை அணி என்றாலும் சரி ஐபிஎல் அணி என்றாலும் சரி என்னிடம் ஒரே மாதிரியாகவே பழகினார். நம்முடைய தேவையை புரிந்து கொண்டு எப்பொழுதும் நமக்காக அவர் முன் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

இதுவரை உங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலமாக நீங்கள் கைப்பற்றிய பேட்ஸ்மேன்கள் மத்தியில் உங்கள் மனதிற்குப் பிடித்த தருணம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “சையது முஷ்டாக் அழி டிராபி தொடரில் நான் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினேன். அவருடைய விக்கெட்டை கைப்பற்றிய தருணம் என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் முகமது கைஃப் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,”ரிக்கி பாண்டிங் எப்பொழுதும் என்னிடம் நன்றாக நடந்துகொள்வார் எப்பொழுதும் நான் ஒரு வெளி வீரர் என்கிற உணர்வைத் தர மாட்டார். மறுபக்கம் முகமது கைஃப் தனது தொழில் மீது மிகவும் கவனமாக இருப்பார். தொழில் மீதான அவரது ஈடுபாடு என்னை வியக்க வைத்தது என்று கூறியுள்ளார்.

இறுதியாக இந்த ஆண்டிற்கான உங்களது திட்டம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்த ஆண்டு மனதளவிலும் உடலளவிலும் நான் ஒரு படி முன்னேற ஆசைப்படுகிறேன். ஒரு சராசரி மனிதனாக உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதே என்னுடைய திட்டம் என்றும் ஷம்ஸ் முலானி கூறி முடித்தார்.