“ரோகித் செய்த தவறான காரியம்” பும்ரா உலககோப்பையில் இல்லாமல் போனதற்கு ரோகித் சர்மா தான் காரணம் – முன்னாள் இந்திய பயிற்சியாளர் சாடல்!

0
433

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விலகியதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆசிய கோப்பை தொடரையும் தவறவிட்டார். அதன் பிறகு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக குணமடைந்து விட்டார் என தெரியவந்தது. இதனால் உலககோப்பை அணியில் இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னால் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களும் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய டி20 தொடரின் போது முதல் போட்டியில் விளையாட வைக்கப்படவில்லை. அதற்கு பல கேள்விகள் எழுந்தன. ஏனெனில் இந்தியா அப்போட்டியில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு இரண்டாவது மூன்றாவது  டி20 போட்டியில் விளையாடிய அவர், தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு முன்பாக முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாக வலியுறுத்தினார். அதன் பின்னர் அவருக்கு நடந்த பரிசோதனையில் காயம் தீவிரமாக இருப்பதும், டி20 உலககோப்பை தொடரில் அவரால் இடம்பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டு விட்டது. 

பும்ரா போன்ற முக்கியமான வீரரை மிகவும் மோசமாக ரோகித் சர்மா பயன்படுத்தினார் என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர். அவர் கூறுகையில், பும்ராவின் உடல் நலம் எவ்வளவு முக்கியம் என்பதை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் சற்றும் உணரவில்லை. முதல் டி20 போட்டியில் விளையாட வைக்கவில்லை. உடனடியாக உடல்நலம் தெரியிருக்கும் என நினைத்து திடீரென இரண்டாவது போட்டியில் விளையாட வைக்கப்பட்டார். பிறகு மூன்றாவது போட்டியிலும் வற்புறுத்தலின் பேரில் விளையாட வைக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு முன்பு திடீரென எப்படி முதுகு வலி ஏற்பட்டு அந்த தொடரில் இருந்து விலகினார். தற்போது மொத்தமாகவும் அவர் அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். 

நமக்கு ஏற்பட்ட பின்னடைவு எதிரணி கிடைத்திருக்கும் வாய்ப்பாக இது  மாறிவிட்டது. பும்ராவின் உடல் நிலையை பாதுகாத்து எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதை ரோகித் சர்மா அலட்சியமாக எடுத்துக் கொண்டார். பும்ரா இல்லாமல் இந்திய அணி மீது இருக்கும் பார்வை முற்றிலுமாக மாறுபட்டதாக இருக்கும். தற்போது அவர் இல்லாத நேரத்தில் எதிரணி கூடுதல் பலமாக தன்னை உணர்ந்து இந்திய அணிக்கு எதிராக செயல்படும். இதை ஏன் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா இருவரும் புரிந்து கொள்ளவில்லை.” என வருத்தத்துடன் பேசினார்.