ஐபிஎல் தொடரில் அதிக டாட் பந்துகளை வீசிய 5 பவுலர்கள்

0
105
Malinga IPL

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு அணியின் வெற்றிக்கு பவுலர்கள் மிக மிக முக்கிய காரணம். எனவே தான் ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் பேட்ஸ்மேன்களுக்கு இணையான பௌலிங் வீரர்களை தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மிக அற்புதமாக பந்து வீச வேண்டும் என ஒவ்வொரு அணி நிர்வாகமும் எதிர்பார்க்கும். ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், அதிக ரன்களை குவிக்க விடாமல் செய்யவேண்டும் என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய இலக்காக இருக்கும்.

என்னதான் ஒரு பக்கம் விக்கட்டுகளை ஒரு போட்டியில் எடுத்தாலும் 40 அல்லது 50 ரன்கள் கொடுத்தால் எப்படியும் அது எதிர் அணிக்கு சாதகமாக தான் சென்று முடியும். எனவே ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் குவிக்க விடாமல் டாட் பந்துகளை அதிக அளவில் வீசும் பந்துவீச்சாளர்களே அணியின் வெற்றியை உறுதி படுத்துவார்கள். அப்படி தற்பொழுது வரை ஐபிஎல் தொடரில் அதிக டாட் பந்துகளை வீசிய பந்து வீச்சாளர்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்

5. ஹர்பஜன் சிங்

ஹர்பஜன்சிங் மும்பை அணிக்காக பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் சென்னை அணிக்காக சில போட்டிகளில் விளையாடினார். தற்பொழுது கொல்கத்தா அணிக்காக அவர் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் மொத்தமாக 160 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

160 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் மொத்தமாக 569 ஓவர்கள் வீசியுள்ளார். இதில் மொத்தமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் அவர் வீசிய டாட் பந்துகள் 1268 ஆகும். இவருடைய சராசரி பௌலிங் ஆவரேஜ் 26.86 மற்றும் பௌலிங் எகானமி 7.05 ஆகும்.

4. ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆரம்பத்தில் சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடினார்.அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் அணியில் சில காலம் விளையாடினார், தற்போது அவர் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 156 போட்டிகளில் விளையாடி 557 ஓவர்கள் வீசியுள்ளார். இதில் இவர் எடுத்த மொத்த விக்கெட்டுகள் 139 ஆகும். இதில் இவர் வீசிய மொத்த டாட் பந்துகள் 1215 ஆகும். ஐபிஎல் தொடரில் இவரது சராசரி பௌலிங் அவரேஜ் 27.68 மற்றும் இவரது பவுலிங் எக்கானமி 6.90 ஆகும்.

3. புவனேஸ்வர் குமார்

ஐபிஎல் தொடர்களில் இவர் ஆரம்பத்தில் பெங்களூரு மற்றும் புனே அணிக்காக விளையாடினார். அதற்குப் பின்னர் 2014ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதுவரை மொத்தமாக 126 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இதில் இவர் மொத்தமாக வீசிய ஓவர்கள் 468 ஆகும். இதில் இவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் 139 மற்றும் இவர் வீசிய டாட் பந்துகள் 1204 ஆகும். ஐபிஎல் தொடர்களில் இவரது பௌலிங் அவரேஜ் 7.31 மற்றும் இவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 20.22 ஆகும்.

2. சுனில் நரைன்

ஆரம்பத்திலிருந்தே சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுனில் நரைன் கொல்கத்தா அணிக்காக தற்போது வரை 123 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் இதில் இவர் மொத்தமாக வீசிய ஓவர்கள் 480 ஆகும். இவர் கைப்பற்றிய மொத்த விக்கெட்டுகள் 130 மற்றும் இவர் வீசிய பந்து களின் எண்ணிக்கை 1155 ஆகும். ஐபிஎல் தொடரில் இவரது பௌலிங் அவரேஜ் 25.06 மற்றும் இவரது பௌலிங் எக்கானமி 6.78 ஆகும்.

1. லசித் மலிங்கா

மலிங்கா ஆரம்பத்திலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர் இவர் மட்டுமே. இவர் மொத்தமாக 122 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் இதில் இவர் வீசிய ஓவர்களின் எண்ணிக்கை 471 ஆகும். இவர் கைப்பற்றிய மொத்த விக்கெட்டுகள் 170 மற்றும் அதில் இவர் வீசிய பந்து களின் எண்ணிக்கை 1155 ஆகும். ஐபிஎல் தொடரில் இவரது பௌலிங் அவரேஜ் 19.9 மற்றும் இவரது பவுலிங் எக்கானமி 7.14 ஆகும்.

இந்த டாப் 5 வீரர்களில் மலிங்கா மற்றும் சுனில் நரைன் இருவரும் மொத்தமாக வீசிய பந்து களின் எண்ணிக்கை 1115 ஆகும். அதேபோல ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை இருவரும் 6 முறையும், அதே போல ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை இருவரும் ஒரு முறையும் கைப்பற்றியிருக்கின்றனர். இவர்களது ரெக்கார்டுகள் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.