இந்திய கிரிக்கெட்

50 ஓவர் 547 ரன்.. 3 சதங்கள்.. சூரியவன்சி சகிபுல் 2 மெகா சாதனைகள்.. பீகார் மிரட்டல் பேட்டிங்

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக பீகார் அணி பல்வேறு சாதனைகளைப் படைத்து மிரட்டி இருக்கிறது.

- Advertisement -

இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சூரியவன்சி சாதனை

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பீகார் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவனசி 36 பந்துகளில் சதம் அடித்து மொத்தம் 84 பந்துகளில் 15 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகள் உடன் மொத்தம் 190 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த இளம் வீரராக வைபவ் சூரிய வன்சி உலகச் சாதனை படைத்தார். மேலும் ஐபிஎல் தொடரில் ஆரம்பித்து, ரஞ்சி, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணி, இந்திய ஏ அணி, சையத் முஸ்தாக் அலி தொடர், தற்போது விஜய் ஹசாரே டிராபி என எல்லாவற்றிலும் சதம் அடித்து விட்டார்.

- Advertisement -

சகிபால் கனி சாதனை

வைபவ் சூர்யவன்சி ஆட்டம் இறந்ததற்குப் பிறகு பொறுப்பை கையில் எடுத்த பீகார் கேப்டன் சகிபால் கனி வெறும் 32 பந்தில் சதம் அடித்தார். மொத்தம் 40 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் உடன் 128 ரன்கள் எடுத்தார். இன்னொரு வீரர் ஆயுஸ் சதம் அடித்து 56 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : விராட் கோலிய அப்படி சொல்றது.. எனக்கு கேட்டாலே எரிச்சலா இருக்கு – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

சகிபால் கனி 32 பந்தில் சதம் அடித்ததின் மூலம் அதிவேகமாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்திருக்கிறார். முதல் இடத்தில் 29 பந்தில் பிரேசர் மெக்கார்க் சதம் அடித்திருக்கிறார். மேலும் 50 ஓவர்கள் முடிவில் 547 ரன்கள் பீகார் அணி குவித்தது. இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரு போட்டியில் அடித்த மிகப்பெரிய ஸ்கோர் ஆக உலகச் சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: Sakibul Gani

Recent Posts