ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 அணிகள்

0
5630
India vs Bermuda

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரையில் ஒவ்வொரு போட்டியிலும் முதலில் விளையாடும் அணிகள் முழுவதுமாக 50 ஓவர்கள் விளையாடவே விரும்பும். முடிந்த அளவு 50 ஓவர்களில் மிக சிறப்பாக விளையாடி எதிரணிக்கு மிகப்பெரிய டார்கெட் அமைத்து எதிர் அணியை பேட்டிங் செய்ய அழைக்கும்.

அதன்பின்னர் வந்து விளையாடும் எதிரணிகள் ஒரு சில சமயங்களில் வெற்றி பெறும் அல்லது ஒரு சில சமயங்களில் தோல்வி பெறும். அப்படி தோல்வி பெறும் அணிகள் ஒரு சில சமயம் டார்கெட் ஸ்கோரை கிட்டத்தட்ட எட்டும் அளவுக்கு விளையாடி தோற்க்கும்.

- Advertisement -

ஆனால் ஒரு சில சமயம் எதிர்பாரா விதமாக அனைத்து பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகி விட வெகு சீக்கிரமாகவே தங்களுடைய இரண்டாவதாக விளையாடும் அணிகள் தோல்வியை அடைந்துவிடும். அதன்படி, மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில அணிகளை பற்றி பார்ப்போம்.

1. அயர்லாந்து அணியை 290 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து அணி

2008 ஆம் ஆண்டு நியூசிலாந்து அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதில் ஒரு போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 402 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணியில் விளையாடிய ஜேம்ஸ் மார்ஷல் 161 ரன்களும் பிரண்டன் மெக்கல்லம் 166 ரன்கள் எடுத்திருந்தனர்.

அதன் பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 29 வது ஓவரில் 112 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி சார்பாக சவுதி 3 விக்கெட்டுகளையும், மேசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இன்றுவரை மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணியாக திகழ்கிறது.

- Advertisement -

2. ஆப்கானிஸ்தானை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

Australia

2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 417 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக வார்னர் 178 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும், மேக்ஸ்வெல் 88 ரன்களும் குவித்தனர்.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 38-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 142 ரன்களில் ஆட்டமிழந்தது. மிட்செல் ஜான்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக தற்போது திகழ்கிறது.

3. ஜிம்பாப்வே அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுத் ஆப்பிரிக்கா

2010ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சவுத்ஆப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 399 ரன்கள் குவித்தது. ஜேபி டுமினி 129 ரன்களும், டீ வில்லியர்ஸ் 109 ரன்களும் குவித்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய சிம்பாப்வே அணி எதிர்பாராத விதமாக அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 127 ரன்களில் ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக தெரோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலமாக 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அணி மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மூன்றாவது அணியாக திகழ்கிறது.

4. இலங்கையை 258 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுத் ஆப்ரிக்கா

2012 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒரு போட்டியில் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 301 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் ஹசிம் அம்லா 112 ரன்களும், ஏபி டிவில்லியர்ஸ் 52 ரன்களும் குவித்தனர். இலங்கை அணியில் லசித் மலிங்கா அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி மோர்னே மோர்கல் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 43 ரன்களில் ஆட்டமிழந்தது. மோர்னி மோர்க்கல் அந்த போட்டியில் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் 258 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 4வது அணியாக தற்போது தெரிகிறது.

5. பெர்முடா அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி

2007 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பிற அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 413 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் மிக சிறப்பாக விளையாடிய கங்குலி 89 ரன்கள் சேவாக் 114 ரன்கள் குவித்தனர்.

பின்னர் விளையாடிய பெர்முடா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிகள் மிக சிறப்பாக பந்துவீசிய அஜித் அகர்கர் மற்றும் கும்ப்ளே இருவரும் இணைந்து தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலமாக இறுதியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஐந்தாவது அணியாக தற்போது திகழ்கிறது.