டி20ல் மகத்தான சாதனையை தன்வசப்படுத்திய இந்திய அணி.. 168 ரன்கள் வெற்றிக்கு கிடைத்த கவுரவம்!

0
931

நியூசிலாந்து அணியை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெற்ற வெற்றியால், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டிசைடர் போட்டி நடைபெற்றது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த போட்டியைக்கான வந்திருந்தனர்.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் திரிப்பாதி 44 ரன்களும், ஷுப்மன் கில் 126 ரன்கள் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எட்டியது.

235 ரன்கள் இலக்கை துரத்த களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு எந்த விதத்திலும் வாய்ப்பு கொடுக்காமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். 21 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

- Advertisement -

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அதிகபட்சமாக இருந்தது.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் (டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள்)

  1. இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  2. இந்திய அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  3. பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.