10 புள்ளிகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் பெரிய தள்ளுமுள்ளு; ஆர்சிபி-யை விட மோசமாக விளையாடி தோற்ற லக்னோ!

0
850
RCB

ஐபிஎல் 16வது சீசனில் 43 வது போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது!

பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தைக் கொண்ட இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய பெங்களூரு அணிக்கு முதல் விக்கெட்டுக்கு கேப்டன் பாப் மற்றும் விராட் கோலி இருவரும் 62 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து வலிமையான துவக்கம் தந்தார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 31, அனுஜ்ராவத் 9, கேப்டன் பாப் 44, மேக்ஸ்வெல் 4, பிரபுதேசாய் 6, தினேஷ் கார்த்திக் 16, லோம்ரர் 3, ஹசரங்கா 8, கரன் ஷர்மா 2, முகமது சிராஜ் 0, ஹேசில்வுட் 1* ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் வந்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் நான்கு ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஃபீல்டிங் செய்யும் பொழுது காயம் அடைந்ததால் லக்னோ அணிக்கு கேப்டன் ராகுல் துவக்கம் தர வரவில்லை. லக்னோ அணிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை அதிர்ச்சியாகவே எல்லாம் அமைந்தது.

லக்னோ அணிக்கு கையில் மேயர்ஸ் 0, ஆயுஷ் பதோனி 4, குர்னால் பாண்டியா 14, தீபக் ஹூடா 1, நிக்கோலஸ் பூரன் 9, ஸ்டாய்னிஸ் 13, கிருஷ்ணப்பா கௌதம் 23, ரவி பிஸ்னாய் 5, நவீன் உல் ஹக் 13, அமித் மிஸ்ரா 19, கே எல் ராகுல் 0* என ரன்கள் எடுக்க, ஒரு பந்து மீதம் இருக்க, லக்னோ அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதன் மூலம் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் ஐந்தாவது வெற்றியை பெற்றது. பெங்களூரு அணிதரப்பில் கரண் சர்மா நான்கு ஓவர்களுக்கு 20 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தற்போது புள்ளி பட்டியலில் குஜராத் எட்டு ஆட்டங்களில் ஆறு வெற்றி உடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் என அடுத்த ஐந்து இடங்களில், ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி பெற்று, பத்து புள்ளிகளுடன் 5 அணிகள் இருக்கின்றன. எனவே இதற்குப் பிறகு இந்த ஐபிஎல் தொடர் இன்னும் சூடு பிடிக்கும்!