இந்திய கிரிக்கெட்

ஆர்சிபில விராட் சொல்லியும் கூட படிதார் அதைக் கேட்கல.. அவர் சொந்தமாதான் முடிவெடுப்பார் – புவனேஸ்வர் குமார் பேட்டி

​ஐபிஎல் தொடரில் ஆர்சிபி டீம் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், கேப்டன் ரஜத் படிதாரின் கேப்டன்ஷிப் திறமை குறித்து அந்த டீமின் சீனியர் ஃபாஸ்ட் பௌலர் புவனேஷ்பர் குமார் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

- Advertisement -

​ஆர்சிபி டீம் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து கோப்பையைக் கைப்பற்ற ரஜத் படிதாரின் தெளிவான முடிவுகளும் நிலையான அணுகுமுறையுமே முக்கிய காரணம் என்று புவனேஷ்பர் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

​சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடிய அனுபவம் மற்றும் டீமின் மேனேஜ்மெண்ட் அளித்த ஆதரவு ஆகியவை தங்களுக்கு பெரும் தன்னம்பிக்கையை கொடுத்ததாக அவர் மேலும் பகிர்ந்துள்ளார்.

​இதுகுறித்து புவனேஷ்பர் குமார் பேசும்போது “ரஜத் படிதார் கேப்டனாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் இரண்டாவது ட்ரோபி ஜெயிக்கும் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்தார். சீனியர் பிளேயர்கள் அல்லது கோச்சஸ் சொல்லும் அட்வைஸ்களை அவர் கேட்டுக்கொள்வார். ஜேக்கப் டஃபி விளையாடிய முதல் மேட்ச்சில் அவருக்கு தொடர்ந்து நான்கு ஓவர்கள் கொடுத்தார். சிலர் ஒரு ஓவரை அப்புறம் பயன்படுத்தலாம் என்று சொன்னபோதும் ரஜத் தனது முடிவில் கான்ஃபிடன்ட்டாக இருந்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் சின்னசாமி ஸ்டேடியம் ஃபேன்ஸ் பற்றி பேசும்போது “ஆரம்பத்தில் எதிரணியாக சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடியபோதே அங்குள்ள ஃபேன்ஸின் சப்போர்ட் எனக்கு தெரியும். அன் பாக்சிங் ஈவென்ட் நடந்தபோதுதான் அவர்கள் எவ்வளவு வித்தியாசமானவர்கள் என்பதை உணர்ந்தேன். அவர்களுக்கு ட்ரோபி வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள், நாங்கள் புதிய பிளேயர்களாக உள்ளே வந்து அதை சாதித்தது மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts