உலக சாதனை : சர்வதேச டி20 போட்டியின் பவர்ப்ளேவில் எந்த வீரரும் செய்யாததை முதலில் நிகழ்த்திக் காட்டியுள்ள புவனேஷ்வர் குமார்

0
285
Bhuvaneshwar Kumar

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான புவனேஷ்வர் குமார், இந்திய ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர்களில் மிக முக்கியமானவர். பந்தை உள்ளே, வெளியே என இருபுறத்திலும் ஸ்விங் செய்வதில் வல்லவர். அதேசமயத்தில் பந்து தேய்ந்து ஸ்விங் கிடைக்காத பொழுது, சரியான லைன் & லென்த்தில் வீசுவதோடு, பிலாக் ஹோலில் துல்லியமாகவும், வேகத்தைக் குறைத்தும், நக்குல் வகை பந்துகளை வீசியும் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஏ.பி.டிவிலியர்ஸை கிரிஸில் வைத்து, 15 ரன்களை தராது வெற்றியை ஹைதராபாத் அணிக்கு கொண்டுவந்தவர். இந்தளவிற்கு அவரது பந்துவீச்சின் துல்லியம் இருக்கும்.

உத்திரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணிக்கு விளையாடி வந்த புவனேஷ் குமார் அங்கு தனது சிறப்பான ஸ்விங் பந்துவீச்சால் கவனம் ஈர்க்கப்பட்டு இந்திய அணியில் இடம்பெற்று, பாகிஸ்தானிற்கு எதிரான டி20 போட்டியில் டிசம்பர் மாதம் 2012ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். அதே மாதம் அதே ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராகவே ஒருநாள் போட்டியிலும் அறிமுகம் ஆனார். 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

- Advertisement -

தனது ஸ்விங் வேகப்பந்து வீச்சால் கவனம் பெற்ற புவனேஷ்வர் குமாருக்கு காயங்கள் மிகப்பெரிய பிரச்சினையாகத் தொடர்ந்து இருந்து வந்தது. இதனால் அவர் 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. கடைசியாக இந்த ஆண்டு தென்ஆப்பிரிக்க அணியோடு மோதிய ஒருநாள் தொடரில்தான் ஆடினார். கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இன்டீஸ் உடனான ஒருநாள் போட்டி அணியில் இடம் கிடைக்கவில்லை. டி20 அணியில்தான் இடம்பெற்றார்.

டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தும் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு மீண்டும் பழைய முறையில் மிகச் சிறப்பாக மாறியிருக்கிறது. பந்துகளை காற்றில் இருபுறமும் திருப்பி பேட்ஸ்மேன்களை அலைக்கழிக்கிறார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜோஸ் பட்லரை பிரமாதமான இன்-ஸ்விங்கில், அவர் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்ட் செய்தார். இரண்டாவது போட்டியில் ஆட்டத்தின் முதல் பந்தை அவுட்-ஸ்விங்காக வீசி ஜேசன் ராயை எட்ஜ் எடுக்க வைத்து, ஸ்லிப்பில் ரோகித் சர்மா மூலம் தூக்கினார். இந்த ஆட்டத்தில் மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமார் டாட் பந்துகள் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். அதாவது 500 டாட் பந்துகளை டி20 கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இந்தப் பட்டியலில் புவனேஷ்வர் குமாருக்கு கீழே இருக்கும் பந்துவீச்சாளர்கள்:

- Advertisement -

புவனேஷ்வர் குமார் – இந்தியா – 500 டாட் பந்துகள்
சாமுவேல் பத்ரி – வெஸ்ட் இன்டீஸ்- 383 டாட் பந்துகள்
டிம் செளதி – நியூசிலாந்து – 368 டாட் பந்துகள்
மிட்ச்செல் ஸ்டார்க் – ஆஸ்திரேலியா – 354 டாட் பந்துகள்