ஐ.பி.எலில் புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார் ; அதை அடுத்த ஒருமணி நேரத்தில் முறியடித்த அஷ்வின்

0
1236
Bhuvaneshwar Kumar and Ravichandran Ashwin

2022 ஐ.பி.எல் லீக் போட்டியின் ஐந்தாவது ஆட்டம் மஹாராஷ்ட்ராவின் புனேவில் நடந்து முடிந்திருக்கிறது. இப்போட்டியில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சனின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி பட்லர் 35 [28], சஞ்சு சாம்சன் 55 [27], படிக்கல் 41 [29] ஹெட்மயர் 33 [13] ஆகியோரின் பங்களிப்போடு 210 ரன்களை 6 விக்கெட் இழப்பிற்கு குவித்தது.

- Advertisement -

பின்பு கடினமான 211 என்ற இலக்கோடு களமிறங்கிய ஹைதராபாத்திற்கு, பேட்டிங் போலவே பந்துவீச்சிலும் அதிர்ச்சியளித்தது ராஜஸ்தான். வில்லியம்சன் 2 [7], ராகுல் திரிபாதி 0 [3] என்று பிரசித் கிருஷ்ணா வெளியேற்றினார். டிரென்ட் போல்ட் நிக்கோலஸ் பூரனை 0 [8] வழியனுப்பி வைத்தார்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் 147 ரன்களை மட்டுமே 7 விக்கெட் இழப்புக்கு அடித்தது. இறுதிக்கட்டத்தில் மார்க்ரம் 57* [41], வாஷிங்டன் 40 [14] என்று அதிரடி காட்டியதால்தான் இந்த ரன்களுமே வந்தது.

இந்த போட்டியில் பவர்-ப்ளேவில் குறைந்த ரன்கள் அடித்த அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் படைக்க, இதே போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஷ்வின் ஒரு புதிய ஐ.பி.எல் சாதனையைச் படைத்திருக்கிறார். என்ன சாதனை என்றால், ஐ.பி.எல்-ல் அதிக டாட்-பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

- Advertisement -
ஐ.பி.எலில் ஆயிரத்திற்கும் மேல் டாட்-பந்துகளை வீசிய ஆறு பந்துவீச்சாளர்கள்:

ரவி அஷ்வின் – 1273
புவனேஷ்வர் குமார் – 1270
ஹர்பஜன் சிங் – 1268
சுனில் நரைன் – 1259
லசித் மலிங்கா – 1155
அமித் மிஷ்ரா – 1154

இதில் சுவாரசியமான ஒரு விசயம் என்னவென்றால், இதே போட்டியில் ஐ.பி.எல்-ல் அதிக டாட்-பந்துகள் வீசிய பவுலர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைக்க, அதை அடுத்த ஒருமணி நேரத்தில் அஷ்வின் முறியடித்திருக்கிறார்!