சிஎஸ்கே ரசிகர்களே ஹாப்பி நியூஸ்.. முக்கிய வீரர் இருக்கப்போகிறார்; 2 வீரர்கள் வெளியேற்றம்!

0
12293
CSK CEO Kasi Viswanathan and Ravindra Jadeja

இரண்டு வீரர்களை வெளியேற்றுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முக்கிய வீரர் தக்க வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2010 ஆம் ஆண்டு முதல் நம்பிக்கையான ஆல்ரவுண்டராக திகழ்ந்து வந்தவர் ரவீந்திர ஜடேஜா. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சுரேஷ் ரெய்னா சிறப்பான ஃபார்மில் இல்லை என்பதால் கடந்த ஐபிஎல் தொடரில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கவில்லை. ஏலத்திலும் எடுக்கவில்லை.

ஆதலால், தோனிக்கு அடுத்த இடத்தில் சீனியராக இருக்கும் ரவீந்திர ஜடேஜாவிற்கு திடீரென்று தனது கேப்டன் பொறுப்பை கொடுத்தார் தோனி. ‘சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதை அவரிடம் கொடுத்ததாக’ தோனி தனது பேட்டியில் கூறியிருந்தார்.

ஜடேஜாவின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வினையாக மாறியது. 6 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் வெற்றி என முதல் எட்டு போட்டிகளுக்கு பின் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியிடம் கொடுத்தார்.

அதன் பிறகு ஜடேஜா மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு இடையே பனிப்போர் நிலவியது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணியை அன்பாலோ செய்வது மற்றும் சிஎஸ்கே அணி சார்ந்த பதிவுகளை நீக்குவது என தொடர்ச்சியாக ஜடேஜாவின் செயல் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை சீண்டுவதாக இருந்தது.

இதன் அடிப்படையில் இனி சிஎஸ்ஐ அணியில் நீடிக்க மாட்டார். வேறு அணிக்கு வீரர் பரிமாற்ற முறையில் மாற்றப்படுவார் என்ற உட்புற செய்திகளும் வெளிவந்தன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கேப்டன் தோனி தலையிட்டு ஜடேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விஷயத்தை சுமூகமாக மாற்றி இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. மேலும் ஜடேஜாவிடம் சிஎஸ்கே அணியின் திட்டங்களை விளக்கி, அவர் அதில் எவ்வளவு முக்கிய பங்காற்றப்போகிறார் என்பதையும் எடுத்துரைத்த பிறகு ஜடேஜா மீண்டும் தனது முடிவை மாற்றி இருப்பதாகவும் தகவல்கள் வந்ததுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதிக்குள் வீரர்கள் பரிமாற்றத்தை இறுதி செய்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் நிபந்தனை கொடுத்திருக்கிறது. அதனடிப்படையில் ஜடேஜாவை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துவிட்டு, வேறு இரண்டு வீரர்களை வெளியேற்றுகிறது.

இந்த இரண்டு வீரர்களில் ஆடம் மில்னே மற்றும் கிரிஸ் ஜோர்டன் ஆகிய இருவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களுக்கு பதிலாக வேறு வேகப்பந்துவீச்சாளர்களை சென்னை அணி எடுக்க விருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. இது பற்றிய முழு விபரம் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி தெரியவரும்.