இந்தியா-பாகிஸ்தான் கேம்ல இந்த டீம் தான் வின் பண்ணனும்னு நெனச்சேன் – ஏபி டி வில்லியர்ஸ் பேட்டி!

0
781

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ஏபி டி வில்லியர்ஸ்.

டி20 உலகக் கோப்பை தொடரில் தகுதி சுற்று மற்றும் சூப்பர் 12 சுற்றும் முடிவடைந்து இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்திய அணி இங்கிலாந்து அணியையும் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியையும் அரையிறுதி சுற்றில் எதிர்கொள்கின்றன. இதுவரை நடந்த கிட்டத்தட்ட 40 போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிதான் மிகவும் விறுவிறுப்பை கொடுத்தது.

அதிக பார்வையாளர்களும் ஹாட்ஸ்டார் இணையதளத்தில் அந்த போட்டியை தான் கண்டிருக்கின்றனர். சில முன்னாள் வீரர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியோடு இந்த உலகக் கோப்பை முடிவடைந்து இருக்கலாம். மிகவும் மன நிறைவோடு சென்று இருப்பேன் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில், எந்த அணி வெற்றி பெற்றிருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன்? என்று தனது சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார் ஏ பி டி வில்லியர்ஸ். அவர் கூறுகையில்

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி அளவிற்கு வேறு எந்த போட்டியும் எனக்கு விறுவிறுப்பை தரவில்லை. நான் இந்திய அணிக்கு தான் சப்போர்ட் செய்தேன். இந்திய அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்து விட்டது. என் நண்பர் விராட் கோலி அபாரமாக விளையாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும். அதில் இந்திய அணி வெற்றி பெற்றால் நான் மிகவும் மகிழ்வேன்.” என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், “சூரியகுமார் யாதவ் பற்றி பேசியவர் மிகச்சிறந்த ஃபாமில் இருக்கிறார் இந்திய அணிக்கு மிக முக்கிய பங்களிப்பை கொடுப்பார். விராட் கோலியுடன் இணைந்து அவர் பார்ட்னர்ஷிப் அமைத்து தருவது எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளிலும் இந்த ஜோடி அதனை மீண்டும் ஒருமுறை செய்து காட்டும் என்று நம்புகிறேன்.” என கூறினார்