சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த 11 வீரர்கள்

0
537
MS Dhoni and Badrinath

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நல்ல வகையில் விளையாடி இருக்கும். அந்த அணி சரியாக விளையாடாத ஒரே ஆண்டு கடந்த ஆண்டு மட்டும் தான். அதற்கு முந்தைய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் குறைந்த பட்சம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

தற்பொழுது வரை மூன்று முறை சாம்பியன் ஆகவும் ஐந்து முறை ரன்னர் அப் அணியாகவும் அந்த அணி வருகிறது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கூட மிக சிறப்பாக விளையாடிய புள்ளி பட்டியலில் தற்போதுவரை முதல் இடத்தில் இருக்கிறது. எங்கே எப்பொழுது விளையாடினாலும் சென்னை அணியை எதிர்கொள்ளும் மற்ற அணிகள் சற்று பயந்து அந்த அணியை எதிர்கொள்ள என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.அப்படிப்பட்ட அந்த அணியின் தலைசிறந்த 11 வீரர்களைப் பற்றி பார்ப்போம்

முரளி விஜய் மற்றும் மேத்யூ ஹைடன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் வீரர்களாக பல்வேறு வீரர்கள் விளையாட இருந்தாலும் இவர்கள் இருவரை வேறு எவரும் அசைக்க முடியாது. அந்த அளவுக்கு இவர்கள் விளையாடிய நேரத்தில் மிக சிறப்பாக விளையாடினார்கள். 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர்களது ஓபனிங் பார்ட்னர்ஷிப் எதிரணியை கதிகலங்கச் செய்யும். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது வரை 1,600 ரன்கள் குவித்திருக்கிறார். ஒரு ஓவருக்கு சராசரியாக 25 ரன்கள் வைக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடுவார்கள். குறிப்பாக மேத்யூ ஹெய்டன் மூன்று தொடர்களில் மட்டுமே விளையாடி 1107 ரன்கள் குவித்தார். அவரது பேட்டிங் அவரேஜ் மட்டும் 36.9 என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: சுரேஷ் ரெய்னா, மைக்கேல் ஹஸி மற்றும் சுப்ரமணியம் பத்ரிநாத்

அவர்கள் இருவரை தொடர்ந்து அதற்கு அடுத்தபடியாக அணியில் சக்கை போடு போட்ட 3 வீரர்கள் இவர்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக சின்ன தல என்று எல்லோரும் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ஆனால் தற்போது வரை 4527 ரன்கள் குவித்திருக்கிறார். சென்னை அணிக்கு அதிக ரன்களை குவித்த ஒரு வீரர் இவர்தான். இவரை மிஸ்டர் ஐபிஎல் என்றும் அனைவரும் அழைப்பார்கள்.

அதற்கடுத்தபடியாக சுப்ரமணியம் பத்ரிநாத் இதுவரை அணிக்காக 1141 ரன்கள் குவித்திருக்கிறார் இவரது பேட்டிங் அவரேஜ் 30 ஆகும். அணி சற்று சறுக்கும் நிறத்தில் இவர் நின்று நிதானமாக விளையாடக்கூடிய வீரர் ஆவார். அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஹசி 2015ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடினார். சென்னை அணிக்காக தற்போது வரை அவர் 1768 ரன்கள் குவித்திருக்கிறார் குறிப்பாக இவரது பேட்டிங் அவரேஜ் 42 ஆகும்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: மகேந்திர சிங் தோனி, ரவிந்திர ஜடேஜா மற்றும் டிவைன் பிராவோ

இவர்கள் மூவரை பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை முதலாவதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சென்னை அணிக்காக பல போட்டிகளில் கடைசி நேரங்களில் சென்னை அணியை வெற்றி பெறச் செய்வார் மகேந்திர சிங் தோனி தற்போது வரை சென்னை அணிக்காக 3800 ரன்கள் குவித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ 2011ம் ஆண்டு சென்னை அணியில் இணைந்தார் அன்று முதல் இன்று வரை சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடக்கூடிய வீரராவார். குறிப்பாக இறுதி ஓவர்களில் மிக அற்புதமாக பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் தடுப்பார். தற்போது வரை சென்னை அணிக்காக 104 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரரும் இவரே ஆவார்.

இவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். 2012ஆம் ஆண்டு சென்னை அணியில் இணைந்து தற்போது வரை பேட்டிங்கில் மிக அற்புதமாக விளையாடி அதேபோல் பவுலிங்கில் 81 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின், அல்பி மோர்க்களே மற்றும் லட்சுமிபதி பாலாஜி

ரவிச்சந்திரன் அஸ்வின் முதன் முதலில் சென்னை அணிக்காக விளையாடினார். அதன் பின்னரே பஞ்சாப் அணிக்கு சென்று பஞ்சாப் அணியை தலைமை தாங்கி தற்போது டெல்லி அணியில் விளையாடி வருகிறார். சென்னை அணிக்காக அவர் இதுவரை 90 விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார் குறிப்பாக சென்னையில் ஒரு தலைசிறந்த ஸ்பின் பவுலர் என்று சொல்லும் அளவுக்கு பந்து வீசி இருக்கிறார் என்பதுதான் உண்மை.

இவரைத் தொடர்ந்து மோர்க்கல் ஒரு மிக சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக சென்னை அணியில் விளையாடினார். சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் மத்தியில் 4-வது வீரராக இவர் இருக்கிறார். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் சென்னை அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் கைப்பற்றுவது மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்த வீரர் இவர்.அதேபோல நமது இந்திய வீரர் பாலாஜி சென்னை அணிக்காக மொத்தமாக 31 விக்கெட்களை பெற்று இருக்கிறார். தற்போது கூட சென்னை அணியின் பௌலிங் பயிற்சியாளராக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.