வேறு நாட்டில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடிய வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட அணி

0
315
Ish Sodhi

சர்வதேச கிரிக்கெட்டில், நியூசிலாந்து அணி வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. 2015 & 2019 உலககோப்பை, 2020 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தி வருகிறது. அத்தொடர்களில் வலிமை மிக்க இந்திய அணியை, முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் பைனலில் வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது. நியூசிலாந்து அணியின் அபார வளர்ச்சிக்கு அவர்களது கேப்டன் கேன் வில்லியம்சன் முக்கிய அங்கமாக விளங்குகிறார். நியூசிலாந்து அணியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் அதே நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. கிரிக்கெட்டில் நாடு விட்டு நாடு சென்று பலர் ஆடுகின்றனர். அதே போல் நியூசிலாந்து அனிக்காகவும் வேறு நாடு வீரர்கள் ஆடியுள்ளார். அவர்களைப் வைத்து உருவாக்கப்பட்ட அணியைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

தொடக்க வீரர்கள் – காலின் முன்ரோ & டெவோன் கான்வே

இரு தொடக்க வீரர்களும் தென்னாபிரிக்காவில் பிறந்த இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆவர். ஒப்பனர் காலின் முன்ரோ, டி20ஐயில் நியூசிலாந்து அணிக்காக பல சாதனைகள் படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் விளாசியுள்ளார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே, இந்த வருடம் தான் அணியில் அறிமுகமாகினார். பல இக்கட்டான சூழ்நிலையில் நுட்பமாக ஆடி அணிக்கு முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

மிடில் ஆர்டர் – கிளென் பிலிப்ஸ், பிஜே வாட்லிங் & லூக் ரோங்கி ( கீப்பர் )

மூன்று விக்கெட் கீபர்கள் மிடில் ஆர்டரில் இடம் பிடித்துள்ளனர். அதில் முதல் இரண்டு வீரர்கள் தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக கிளென் பிலிப்ஸ், இதுவரை 697 ரன்கள் அடித்துள்ளார். அடுத்த வீரர் பிஜே வாட்லிங், 75 டெஸ்ட் போட்டிகளில் 3790 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் மே மாதம், 2021ல் தன் ஓய்வை அறிவித்தார்.

2000 முதல் தற்போதை வரை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய என இரு அணிகளுக்கு ஆடிய வீரர்கள் பட்டியலில் இவர் மட்டுமே இருக்கிறார். 102 சர்வதேச போட்டிகளில் 2075 ரன்கள் அடித்ததோடு ஸ்டெம்பிற்கு பின்னால் 133 கேட்சுகளும் 18 ஸ்டெம்பிங்கும் நிகழ்த்தியுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் – கிரான்ட் எலியட், விக்டர் போலார்ட்டு & காலின் டி கிரான்டஹோம்

தென்னாபிரிக்க நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஆல்ரவுண்டர் கிரான்ட் எலியட், நியூசிலாந்து அணிக்காக 2015 உலகக்கோப்பையில் முக்கிய ரன்களை அடித்தார். அதில் மிகப் பிரபலமானது அரை இறுதிப் போட்டி தான். பிறந்த நாட்டிற்க்கு எதிராக 84 ரன்கள் விளாசி நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டாவது ஆல்ரவுண்டர் விக்டர் போலார்ட்டு, இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் நியூசிலாந்து அணிக்காக 32 டெஸ்ட் மற்றும் 3 ஓடிஐயில் சேர்த்து 1333 ரன்கள் மற்றும் 40 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடைசி ஆல்ரவுண்டர் காலின் டி கிரான்டஹோம். இவர் ஜிம்பாப்வே அணிக்காக யு – 19 உலகக்கோப்பை ஆடினார். பின்னர் நியூசிலாந்து நாட்டிற்க்கு குடியேறி இதுவரை 109 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 2434 ரன்களும் 84 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் – இஷ் சோதி, நீல் வேகனர் & டமா கேனிங்

நட்சத்திர ஸ்பின்னர் இஷ் சோதி, இந்திய நாட்டில் பிறந்தவர் என்பது பிரபலமான செய்தி தான். நியூசிலாந்து அணியின் முக்கிய அங்கமாக இவர் திகழ்கிறார். சர்வதேச அளவில் 114 போட்டிகளில் 166 விக்கெட்டுகள் வீழ்தியுள்ளார். அவரது சராசரி 31.81 ஆகும்.

வேகனர் தென்னாபிரிக்கா நாட்டையும் டமா கேனிங் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நீல் வேகனர், டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரமாதமாக செயல்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 2000 ஓவர்கள் வீசி 229 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடைசி வீரர் டமா கேனிங், வெறும் 4 போட்டிகளில் மட்டுமே களமிறங்கினார். அதில் 5 விக்கெட்டுகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.