மன அமைதிக்காக மருந்து உட்கொள்ளும் நிலை.. இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அதிர்ச்சி தகவல்

0
47

சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கும் பென் ஸ்டோக்ஸ் தாம் மன அமைதிக்காக மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.31 வயதான பென் ஸ்டோக்ஸ்- இன் தந்தை நியூசிலாந்தை சேர்ந்தவர். ஸ்டோக்ஸ் பிறந்து வளர்ந்தது எல்லாம் நியூசிலாந்தில் தான். ஆனால் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்துக்கு வந்து குடியுரிமை பெற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

கடந்த 2 ஆண்டுக்கு முன் பென் ஸ்டோக்ஸ் தந்தை புற்றுநோயால் காலமானார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட பென் ஸ்டாக்ஸ். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து மனநலத்தை தேற்றிக் கொள்ளும் முயற்சியில் பென்ஸ்டோக்ஸ் ஈடுபட்டார். சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பிய பென்ஸ்டோக்ஸ் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் மன அமைதிக்காக தினம் தோறும் மாத்திரை சாப்பிட்டு வருவதாக தெரிவித்தார். கிரிக்கெட்டில் தற்போது மீண்டும் திரும்பி விட்டதால் எனது மனநலம் சிறப்பாக இருப்பதாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். தினம்தோறும் மன அழுத்தம் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட பென் ஸ்டோக்ஸ், இன்றளவும் அதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தமது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அவரை சரியாக பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக ஸ்டோக்ஸ் தெரிவித்தார். தாம் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதால் தந்தையுடன் நேரத்தை செலவிட இயலவில்லை என்று குறிப்பிட்ட அவர் அப்போது கிரிக்கெட் மீது தமக்கு கோபம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். ஒரு சில நேரத்தில் தான் தவறான அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று யோசித்ததாகவும் பென்ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார். மனநலம் குறித்து பேசுவதால் தமக்கு எவ்வித வெட்கமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தலைமையிலான இங்கிலாந்தனி தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -