நடப்பு ரஞ்சி சீசனில் பெங்கால் அணிக்கு விளையாடிய முகமது ஷமி 11 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
கடந்த வருடம் உலகக் கோப்பை தொடரில் காலில் காயத்துடன் விளையாடிய முகமது ஷமி அதற்காக அறுவை சிகிச்சை செய்து தற்பொழுது ஒரு வருட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு மீண்டும் ரஞ்சி டிராபியில் திரும்ப வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் பெங்கால் அணி 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய மத்திய பிரதேஷ் அணி 167 ரன்கள் மட்டும் எடுத்து முதல் இன்னிங்ஸ் முன்னிலையை இழந்தது. இதில் பெங்கால் அணிக்காக விளையாடிய ஷமி மொத்தம் 19 ஓவர்கள் பந்துவீசி 54 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பெங்கால் அணி 276 ரன்கள் எடுத்தது. இதில் முகமது ஷமி அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இந்த ரன்கள் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான ரன்களாக பின்பு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து 338 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேஷ் அணி திருப்பி பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. அந்த அணிக்கு சுப்ரன்ஷூ சேனாபதி 50, ஹிம்மன்சு மன்ட்ரி 44, ரஜத் பட்டிதார் 32, சுபம் ஷர்மா 61, வெங்கடேஷ் ஐயர் 63 ரன்கள் எடுத்தார்கள்.
இந்த நிலையில் மத்திய பிரதேஷ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் கைவசம் இருக்க மேற்கொண்டு 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான நிலையில் முகமது ஷமி பேட்டிங்கில் இருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் குமார் கார்த்திகேயாவை அவுட் செய்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் மொத்தம் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : கடைசி ஓவர் 16 ரன்.. அலட்சியமான ஆஸி.. திடீரென பாய்ந்த பாகிஸ்தான் அணி.. சுவாரசியமான போட்டி முடிவு.. 2வது டி20
இந்த டெஸ்ட் போட்டியில் ஷமி மொத்தமாக பேட்டிங்கில் 39 ரன்கள், பந்துவீச்சில் 44 ஓவர்கள் பந்து வீசி ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் அவர் உடல் தகுதி மிகச் சிறப்பாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. எனவே ஷமி அதிரடியாக ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டு முதல் டெஸ்ட் போட்டியிலேயே கூட விளையாடலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.