பாகிஸ்தான் வம்சாவளி சிறுவனை வைத்து.. பாகிஸ்தானை 3-0 என வீழ்த்த ஸ்கெட்ச் போடும் பென் ஸ்டோக்ஸ் – யார் இந்த ரெஹான் அகமது?

0
248

பாகிஸ்தான் வம்சாவளி வீரரை வைத்து 3-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்ற காத்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

17 வருடம் கழித்து பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரண்டையும் இங்கிலாந்து அணி கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி விட்டது.

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 17ஆம் தேதி கராச்சி மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கிறது. அதேநேரம் இத்தகைய வரலாற்று மோசமான தோல்வியை பாகிஸ்தான் அணி சந்தித்து விடக்கூடாது என்ற முனைப்பிலும் அந்த அணி வீரர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அணியில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வெறும் 18 வயதேயான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரெஹான் அகமது பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களையும் பென்ஸ்டோக்ஸ் பகிர்ந்து கொண்டார். ரெஹான் அகமது பற்றி பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

“கிரிக்கெட் என்பது அனுபவம் மட்டும் நிறைந்த வீரர்களைக் கொண்டது அல்ல. துடிப்பான இளம் வீரர்களையும் கொண்டது. 18 வயதில் ரெஹான் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருப்பது பல இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். கிரிக்கெட்டில் இதுவும் சாத்தியம், வெறுமனே இளம் வீரர்களை அணியில் எடுத்து விட்டு விளையாட வைக்க மாட்டார்கள் என்று நினைப்பவர்களுக்கு மாற்றுக்கருத்தாக மாறுவதற்கு இது உதவும்.

ரெஹான் லெக்-ஸ்பின்னில் அசத்துகிறார். என்னை மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் இருவரையும் கவர்ந்திருக்கிறார். அதில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை கொடுத்து வருகிறார். இப்போது இருந்தே அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுத்தால் இன்னும் பல போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்று சிறந்த எதிர்கால வீரராகவும் அணிக்காக இருப்பார். அசாத்திய திறமையை கொண்டிருக்கும் இந்த வீரரை திட்டமிட்டு தான் அணியில் எடுத்திருக்கிறோம். கராச்சி மைதானத்திற்கு ஏற்ற வீரராக இருக்கிறார்.” என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த வீரரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக களம் இறக்குவது என்ன விதமான யுக்தி என்று பலரும் பென் ஸ்டோக்ஸ் முடிவைக் கண்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.