கேரி சாபர்ஸ், கபில் தேவ், காலிஸ் போன்ற ஜாம்பவான் ஆல்ரவுண்டர்கள் நிகழ்த்திய சாதனையை சமன் செய்துள்ள பென் ஸ்டோக்ஸ்

0
34
Ben Stokes Century

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டி நேற்று தொடங்கியது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 153 ரன்கள் குவித்தார் அவருக்கு அடுத்தபடியாக பென் ஸ்டோக்ஸ் 120 ரன்கள் குவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் தற்பொழுது ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்த நிலையில் நிதானமாக விளையாடி வருகிறது.

லெஜெண்ட் வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ள பென் ஸ்டோக்ஸ்

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடி வரும் வீரர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்குக்கும் பெயர் போனவர் என்பது கூடுதல் தகவல்.

கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்களுக்கு மேல் குவித்து அதேசமயம் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களாக கேரி இசோபர்ஸ், இயன் போதம், கபில்தேவ் மற்றும் ஜாக்ஸ் காலிஸ் ஆகிய நான்கு வீரர்கள் மட்டுமே இருந்து வந்தனர். இந்த வீரர்கள் பட்டியலில் தற்பொழுது பென் ஸ்டோக்ஸ் 5 ஆவது வீரராக இணைந்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்று அவர் தன்னுடைய 11 ஆவது சதத்தை பதிவு செய்தார். 84 ரன்கள் எடுத்த நிலையில் அவர் மேற்கூறிய சாதனை பட்டியலில் இணைந்தார். இன்றைய போட்டியில் 128 பந்துகளில் 11 பவுண்டரி 6 சிக்ஸர் என மொத்தமாக 120 ரன்கள் குவித்து அசத்தினார்.

டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ்

78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 அரை சதங்கள் மற்றும் 11 சதம் உட்பட மொத்தமாக 5036 ரன்கள் குவித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 36.49 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 57.56 ஆகும். பந்துவீச்சில் 78 போட்டிகளில் மொத்தமாக 170 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பந்துவீச்சில் இவருடைய எக்கானமி 3.31 ஆகும்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியல் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் 28வது இடத்திலும், பந்துவீச்சில் 43 வது இடத்திலும், ஆல்ரவுண்டர் வீரராக 5வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.