என்னுடைய சம்பளம் மொத்தமும் பாகிஸ்தான் மக்களுக்கு – பென் ஸ்டோக்ஸ் அதிரடியான அறிவிப்பு!

0
553

பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான சம்பளத்தை அப்படியே பாகிஸ்தானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

டி20 உலககோப்பை முடிந்தவுடன் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

- Advertisement -

நடைபெறும் இத்தொடரானது டி20 உலக கோப்பைக்கு முன்னர் நடைபெற்ற ஏழு டி20 போட்டிகள் கொண்ட தொடரின் தொடர்ச்சியாகும்.

வருகிற டிசம்பர் 1ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் பெரும் மொத்த சம்பளத்தையும் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக கொடுப்பதாக அறிவித்தார். இது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

கடந்த ஜூன் மாதம் பெய்த மழையில் பாகிஸ்தானில் பெருத்த வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெள்ளத்தினால் கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறையால் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வரலாறு காணாத இந்த வெள்ளத்தினால் பெருத்த சேதம் ஏற்பட்டதோடு நிலச்சரிவும் சேர்ந்து வந்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் அன்றாட வாழ்வு தற்போது வரை பாதிப்பில் இருக்கின்றது.

இந்த பாதிப்பை சரி செய்ய ஏதேனும் ஒரு வகையில் தனது சம்பளம் உதவினால் மிகுந்த மகிழ்ச்சியை அடைவேன் என்றும் தனது பேட்டியில் பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார்.