ரெய்னா ஆட இருக்கும் லங்கா பிரீமியர் லீக்கில் இதுவரை விளையாடி இருக்கும் சிஎஸ்கே சார்ந்த 3 இந்திய வீரர்கள்!

0
2181

உலகெங்கிலும் நடைபெற்று வரும் கிரிக்கெட் பிரிமியர் லீக் தொடர்களில் முக்கியமான ஒன்று லங்கா பிரீமியர் லீக் . இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டி தொடர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது .

தற்போது இந்தப் போட்டி தொடரின் நான்காவது சீசன் ஜூன் 30-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இதற்கான வீரர்களின் ஏலம் இன்று நடைபெறுகிறது . இந்த ஏலத்தை இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . அதற்கு முக்கியமான காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் துணை கேப்டன் குட்டி தல சுரேஷ் ரெய்னாவும் லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் கலந்து கொண்டு தனது பெயரை பதிவு செய்து இருக்கிறார் .

- Advertisement -

2007 டி20 உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இவை தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்கு சாம்பியன் பட்டங்கள் வென்றிருக்கும் ரெய்னா கடந்த ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் . அதன் பிறகு உலகெங்கிலும் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீகாட்டங்களில் பங்கேற்ற ஆடி வருகிறார் . தற்போது இலங்கையில் நடைபெற இருக்கும் இலங்கை பிரிமியர் லீக் தொடரிலும் விளையாட இருக்கிறார் .

கங்கா பிரீமியர் லீக் தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு முன்பாகவே நான்கு இந்திய வீரர்கள் விளையாட இருக்கின்றனர் . இவர்கள் அனைவரும் லங்கா பிரீமியர் லீக் முதல் சீசனில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளனர் . அவர்கள் எந்த வீரர்கள் மற்றும் எந்த அணிக்காக விளையாடி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்

இர்பான் பதான்:
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்ஃபான் பதான் லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடினார் . அந்த சீசனில் நான்கு போட்டிகளில் ஆடிய இர்ஃபான் பதான் 54 ரன்கள் எடுத்தார் . மேலும் விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

முனாஃப் பட்டேல் ;
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் உலகக்கோப்பை வெற்றி பெற்ற வருமான முனாஃப் பட்டேலும் லங்கா பிரீமியர் லீக் இன் முதல் சீசனில் கண்டி டாஸ்கர்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்தப் போட்டி தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

மண்ப்ரீத் சிங் கோனி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இவர் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார் . அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற கோனி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . தான் விளையாடிய ஒரே போட்டியில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சுதீப் தியாகி :
சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடர்களில் விளையாடியதன் மூலம் புகழ்பெற்ற வீரரான சுதீப் தியாகி இந்திய அணிக்காகவும் ஒரு சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார் . இவரும் லங்கா பிரீமியர் லீ கிரிக்கெட் தொடரின் முதல் சீசனில் பங்கேற்று விளையாடினார் . தம்புல்லா வைக்கின்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய இவர் விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது