2022 ஐபிஎலில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பதில் சிக்கல் – அதிரடி முடிவு எடுத்துள்ள பிசிசிஐ

0
755
Hardik Pandya IPL

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகு தண்டுவடத்தில் மிகப் பெரிய காயம் ஏற்பட்டது. காயத்தை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மீண்டும் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு அவர் களமிறங்கி விளையாடினார். பேட்டிங்கில் முன்பு போல நன்றாக விளையாடியவர் பந்துவீச்சில் அவரால் முன்பு போல இயல்பாக பந்து வீச முடியவில்லை. கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடினார். அத்தொடரிலும் ஹர்திக் பாண்டியா அவ்வளவாக பந்து வீசவில்லை.

- Advertisement -

தன்னை முன்புபோல பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் இயல்பாக விளையாடும் அளவுக்கு தயார்படுத்திக்கொள்ள சிறிய கால அவகாசம் தேவை என்று கூறி பிசிசிஐ இடம் அதற்கான சம்மதம் வாங்கினார். அதன்படி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அனைத்து சர்வதேச தொடர்களிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை.

2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரது தலைமையிலான அணி நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நேற்று அந்த அணியின் ஜெர்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் கூட ஹர்திக் பாண்டியா கலந்து கொண்டிருந்தார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு

ஐபிஎல் தொடர் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவிற்க்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹர்திக் பாண்டியா தன்னுடைய உடல் தகுதியை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் நிரூபிக்க வேண்டும். அங்கே நடைபெற இருக்கும் உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும் என்று அதிரடியாக கூறியுள்ளது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா விரைந்து தன்னுடைய உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே குஜராத் அணி நிர்வாகத்தின் மற்றும் குஜராத் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.