தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 & இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளது பிசிசிஐ – ரோஹித், கோலிக்கு ஓய்வு ; தினேஷ் கார்த்திக், புஜாரா கம்பேக்

0
374

நடப்பு ஐபிஎல் தொடருக்கான லீக் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.பின்னர் பிளே ஆப் சுற்று வருகிற செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி வருகிற மே இருபத்தி ஒன்பதாம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. அதன் பின்னர் தென் ஆபிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.இந்த தொடர் ஜூன் 9ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் பட்டியல் :

பெங்களூர் அணியில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் களமிறங்க இருக்கிறார். மறுபக்கம் நடப்பு ஐபிஎல் சீசனில் மிக சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரரான ராகுல் டிரிபாதிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அதேபோல ஷிகர் தவான் அணியில் இடம்பெறாததும் குறிப்பிடத்தக்கது.சீனியர் வீரரான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு எடுத்துள்ளனர்.

டி20 அணி – கேஎல் ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் ), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர்,சஹால், குல்தீப் யாதவ், அக்சர் படேல்,பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் நடந்து முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 24 முதல் ஜூலை மாதம் 17ஆம் தேதி வரையில் ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கின்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. புஜாரா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் கே எஸ் பரத்துக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

டெஸ்ட் அணி – ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்),ஜடேஜா, அஷ்வின், ஷர்துல் தாக்கூர் , முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.