விராட் கோலி – ரோகித் சர்மா இடையே மீண்டும் வெடித்த பனிப்போர்; பிசிசிஐ தலைமை அதிகாரி கொடுத்த டக்கர் பதில்!!

0
820

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரின் ரசிகர்களுக்கு இடையே நடந்த பனிப்போருக்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தக்க பதில் கொடுத்திருக்கிறார்.

இந்திய அணியின் உச்ச நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தனித்தனியான ஆளுமைகளை பெற்றவர்கள். ஐபிஎல் தொடர்களில் தனி அணிகளுக்கு பல வருடங்களாக கேப்டன் பொறுப்பிலும் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் தனியே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

- Advertisement -

விராட் கோலி 2010 முதல் தற்போது வரை இந்திய அணியில் அசைக்க முடியாத வீரர்களில் ஒருவராக இருக்கின்றார். கடந்த ஆண்டு அனைத்து வித கேப்டன் பொறுப்பில் இருந்தும் இவர் விலகினாலும், தற்போது வரை இவருக்கான மரியாதை குறையவில்லை.

அதேபோல் 2013 ஆம் ஆண்டு தோனி, ரோகித் சர்மாவை துவக்க வீரராக களம் இறக்கினார். அப்போது இருந்து தற்போது வரை ரோகித் சர்மாவிற்கு எந்தவித பின்னடைவும் இல்லை. இந்தியாவிற்கு மூன்றுவித போட்டிகளிலும் கேப்டனாகவும் இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் 2013 ஆம் ஆண்டுக்கு முதல் கேப்டன் பொறுப்பில் இருந்து வரும் இவர் ஐந்து முறை கோப்பையை பெற்று தந்திருக்கிறார். ஆகையால் இருவருக்கும் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவ்வபோது இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் வருவதுண்டு. அதேபோன்று ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. மேலும் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அந்த பொறுப்பை ரோகித் சர்மா ஏற்றுக்கொண்டார். அப்போதும் இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் நிலவியது. இந்நிலையில் இந்த மோதல் போக்கு குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

“வீரர்களுக்கு இடையே எந்த ஒரு பாகுபாடும் நாங்கள் பார்ப்பதில்லை. ரசிகர்கள் அவர்களது சூப்பர் ஸ்டாரின் மீது பேரார்வம் கொண்டிருப்பதால் இத்தகைய விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள் நிகழ்கின்றன. குறிப்பிட்ட வீரரை உணர்வுபூர்வமாக நினைத்து விட்டால் அவர்கள் மீது எந்த ஒரு குறை கூறினாலும், கருத்து மோதல்கள் ஏற்படும். இது இயல்பான ஒன்று.

இதற்கு முன்னர் கூட கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் ரசிகர்களுக்கு இடையே இதுபோன்ற மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள் இடையே நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் இவ்விரு வீரர்களின் ரசிகர்களுக்கு இடையே இது போன்ற மோதல் போக்கு நிகழ்கிறது. இதை கடந்து செல்ல வேண்டும். நாம் பெரிதளவில் எடுத்துக்கொள்ள தேவையில்லை. அடுத்த சில நாட்களில் அவர்களாகவே நகர்ந்து விடுவார்கள்.” என்றார்.