இந்த வருடத்துடன் ஐ.பி.எல் முடிவுக்கு வருகிறது – கால்பந்து ஆட்டத்தின் நடைமுறைகளை பின்பற்ற தயாராகும் ஐபிஎல்

0
332
IPL Auction

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிறு ஏலம் நடைபெறும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேகம் நடைபெறுவதும் இதுவரை ஐபிஎல் தொடரில் வழக்கமாக இருந்துள்ளது. மிக இடத்திற்கு முன்பாக குறிப்பிட்ட 4 அல்லது 5 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக்கொள்ளும். ஆனால் சிறு ஏலத்திற்கு அப்படி எதுவும் விதிமுறைகள் கிடையாது. இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு அணியும் தங்கள் தக்க வைக்க போகும் 4 வீரர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் வரும் ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலம் தான் கடைசியாக இருக்கும் என்றும் அதன் பின்பு இந்த நகரம் நடைமுறையில் இருந்து நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மெகா ஏலம் நடைமுறையில் இருப்பதால் தான் ஒரு அணிக்காக தொடர்ந்து விளையாடிய வீரர்கள் வேறு அணியில் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. கிறிஸ் கெயில் பெங்களூர் அணிக்காக விளையாடி அதன் பிறகு பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இது போன்ற மாற்றங்களை எல்லாம் மெகா ஏதும் இல்லை என்றால் எதிர்பார்க்க முடியாது.

வரும் ஆண்டு ஏலம் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு முதல் கால்பந்து தொடர்களைப் போல இருக்கும் அணிகளுக்குள்ளேயே வீரர்களை மாற்றும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது என்று தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை வேறு அணியிடம் இருந்து வாங்கிக் கொள்ள முடியும். மேலும் இந்த முறையினால் ஒரு வீரரை உறங்குவதற்கு மூன்றாண்டு காலம் காத்திருக்காமல் முடிந்த அளவு வேகமாக வாங்கிக் கொள்ளவும் முடியும். ஆனால் இதில் ஒரே வீரர் பல ஆண்டு காலமாக ஒரே அணியில் நீடிப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுபோன்ற ஏல முறை இருப்பதால்தான் மற்ற தொடர்களில் இருந்து வித்தியாசமாக இது தென்படுகிறது. வரும் காலங்களில் இந்த முறை இல்லாமல் ஐபிஎல் தொடர் எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.