சும்மா சென்ற விராட்கோலியை வம்பிழுத்த கம்பீருக்கு கம்மி அபராதம்; விராட் கோலிக்கு இத்தனை கோடி அபராதமா? – பாரபட்சம் பார்க்காமல் காசு கட்டச்சொன்ன ஐபிஎல் நிர்வாகம்!

0
1040

லக்னோ-பெங்களூர் போட்டி முடிந்த பிறகு கம்பீர் மற்றும் விராட் கோலி இடையே சலசலப்பு நிலவியது. இது ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக கருதப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் விராட் கோலி மற்றும் கம்பீர் இருவருடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன் உள் ஹக்-க்கும் கடும் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூர் மற்றும் லக்னோ இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து தட்டுத்தடுமாறி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை 20 ஓவர்களில் சேர்த்தது. இந்த பிட்ச் முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமாகவே காணப்பட்டது.

- Advertisement -

127 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி வரிசையாக ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆங்காங்கே விக்கெட்டுகளை இழந்ததால் எதிர்பார்த்த பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதனால் 19.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கடந்த முறை இந்த இரு அணிகளும் மோதிய போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. கடைசி ஓவர் கடைசி பந்து வரை சென்ற ஆட்டத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.

அப்போட்டி முடிந்த பிறகு பல்வேறு சலசலப்புகள் நிகழ்ந்தன. கம்பீர் ஆர்சிபி ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி வாயில் விரல் வைத்து சைகை காட்டினார். கடைசி ரன் அடித்த ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த முறை இதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்து, கம்பீர் செய்தது சரியல்ல. அன்பு செலுத்த பழகுங்கள் என்று சைகை காட்டினார்.

போட்டி முடிந்தபின் லக்னோ வீரரிடம் விராட் கோலி பேசிக் கொண்டிருக்க, உடனடியாக அந்த பக்கம் வந்த கம்பீர் விராட் கோலியுடன் பேச வேண்டாம் என்று லக்னோ வீரரை இழுத்துச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி சற்று அமைதியுடன் நகர்ந்து சென்றார்.

அதன் பின் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் போட்டி முடிந்த பின்னும் விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, இந்த சண்டை கம்பீர் வரை சென்றது. கடைசியில் நேரடியாக கம்பீரிடம் சென்ற விராத் கோலி வாக்குவாதங்களில் ஈடுபட்டார். இது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது என்று அறிவித்த ஐபிஎல் நிர்வாகம், இவர்களுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. விராட் கோலிக்கு போட்டி சம்பளம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 1.07 கோடி விராட் கோலி கட்ட வேண்டும். கம்பீருக்கும் போட்டியிலிருந்து 100% அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் வருகிறது.

நவீன் உல் ஹக் செய்த செயலுக்கு போட்டியிலிருந்து 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 1.79 லட்சம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது.