டி20 உலகக்கோப்பை.. 30 வீரர்களை கண்காணிக்க முடிவு.. 10 ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ தகவல்

0
4627

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி வெறும் மூன்று டி20 போட்டிகள் தான் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 11ம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.

இந்த மூன்று டி20 போட்டிகளை வைத்துதான் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும். இந்த நிலையில் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இனி வரும் ஆப்கானிஸ்தான் தொடரில் அவர்கள் பங்கேற்பாரா? என்று இதுவரை தெரியவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களை வைத்துதான் உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை களம் இறக்க வேண்டிய சூழலில் உள்ளது.

இதனிடையே, 30 வீரர்களைக் கொண்ட ஒரு அணியை தற்காலிகமாக தேர்வு செய்து அதில் உள்ள வீரர்களின் செயல்பாடுகளை கவனிக்க தேர்வுக்குழுவும் முடிவு எடுத்து இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் காயத்துடன் விளையாடிவிட்டு டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாத சூழல் ஏற்படும்.

இதனால் வீரர்களின் காயத்தை கண்காணிக்க தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளது. அதன்படி இந்த 30 வீரர்களுடைய பணிச்சுமை உணவு கட்டுப்பாடு மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி காயம் ஏற்பட்டால் அவர்களை கண்காணிக்க சிறப்பு திட்டம் ஆகியவற்றை பிசிசிஐ மேற்கொள்ள உள்ளது.

- Advertisement -

இதன்படி எந்த வீரரும் காயத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ “ஐபிஎல் அணிகள் எடுத்துள்ள வீரர்களை இந்த போட்டிக்கு பயன்படுத்துங்கள், அந்த போட்டிக்கு பயன்படுத்தாதீர்கள் என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாது.

ஆனால் அவர்கள் காயம் அடைந்தால் அவர்களை கண்காணிக்க முழு உரிமையையும் பிசிசிஐக்கு இருக்கிறது. இதனால் இதனை ஐபிஎல் அணிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா சூரியகுமார் யாதவ் இருவருமே தற்போது காயம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடரில் கேப்டனாக திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.