ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பண்ட் இருந்த போதும் பும்ராவை துணை கேப்டனாக நியமித்தது ஏன் ? தேர்வுக்குழு விளக்கம்

0
920
Jasprit Bumrah Pant and Shreyas Iyer

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்க அணியின் கோட்டையாக கருதப்படும் செஞ்சூரியன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. பதிவுப் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற வரலாற்றை மாற்ற இந்திய அணிக்கு இந்த முறை அதிக வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடித்தவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. ரோகித் காயம் காரணமாக அணியில் இல்லாததால் அவருடைய கேப்டன் பொறுப்பு ராகுலுக்கு வழங்கப்பட்டது. பலரும் எதிர்பாராத விதமாக துணை கேப்டன் பொறுப்பு பந்துவீச்சாளர் பும்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் விலகியதும் பந்துவீச்சாளர் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் இதன் தாக்கம் நிச்சயம் பும்ராவிற்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப் பட்டதில் இருக்கும். மேலும் இது ஒரு தொடருக்கு மட்டும் தான் என்றும் ரோகித் வந்துவிட்டால் மறுபடியும் ராகுல் துணை கேப்டனாக விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பேசுகையில் பும்ரா சிறப்பான வீரர் என்பதால் அவருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். மூன்றுவித கிரிக்கெட்டும் சிறப்பாக ஆடுவதால் இவருக்கு இந்த பொறுப்பை வழங்கியது எந்த ஆச்சரியமும் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருப்பது சர்வதேச கிரிக்கெட்டுக்கு எதுவும் உதவாது என்றும் 2023 வரை ரோகித் மற்றும் ராகுல் தான் கேப்டனாகவும் துணை கேப்டனாக இருக்கப் போவதால் பண்ட், ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு தேவையில்லாமல் கேப்டன்சி அழுத்தத்தை கொடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மூன்றுவித கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடினால் தான் கேப்டன் பொறுப்புக்கு வர முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளதால் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் மூன்றுவித கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.