இனி இந்திய அணிக்கு 2 கேப்டன்.. வருகிறது புதிய மாற்றம்

0
4689

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது பிசிசிஐ அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியை தேர்வு செய்யும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழுவை பிசிசியை நேற்று இரவு அதிரடியாக கலைத்தது.

மேலும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய பிசிசிஐ அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளது.தேர்வு குழு உறுப்பினராக வர விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏழு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்ச பத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அல்லது 30 முதல் தர போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற முன்னாள் வீரராக இருக்கும் விருப்பம் உள்ள நபர்கள் புதிய பொறுப்புக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் புதிய கமிட்டி வந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும் முதல் பொறுப்பு இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்களை நியமிக்கும் முடிவாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.2023 ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஐசிசி t20 உலக கோப்பை நடைபெறுகிறது.

- Advertisement -

தொடர்ந்து இரண்டு பெரிய தொடர்கள் நடைபெறுவதால் இரண்டு இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ஒரு கேப்டனும் டி20 போட்டிக்கு ஒரு கேப்டன் என்ற முறை அமல்படுத்தப்பட உள்ளது.இதற்கு ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் ஆகவும், ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் ஆகும் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறையை ஏற்கனவே ரவி சாஸ்திரி ஆதரித்துள்ள நிலையில் பிசிசிஐ அதை நோக்கி முடிவு எடுத்துள்ளது. புதிய தேர்வு குழு வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நியமிக்கப்படும் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வரும் ஜனவரி மாதம் விளையாட வர உள்ளது. அந்தத் தொடருக்கு புதிய தேர்வுக்குழு அணி தேர்வு செய்யும்.