இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. டிராவிட், லட்சுமணுடன் பிசிசிஐ ஆலோசனை

0
2666

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஒரு ஐசிசி தொடரை கூட வென்றதில்லை. இம்முறை டி20 உலக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி அரையிறுதியில் தோற்றது.  இதனை தொடர்ந்து நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரையும் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த பயிற்சியாளர்கள் ராகுல் டிராவிட் , வி வி எஸ் லக்ஷ்மன், ரோஹித் சர்மா ஆகியோரை இம்மாத இறுதியில் பிசிசிஐ நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றங்களை செய்ய வேண்டும்? யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்? இந்திய அணி எந்த ஸ்டைலில் கிரிக்கெட் விளையாட வேண்டும் ? டெஸ்ட் ஒரு நாள் மற்றும் டி20 என தொடருக்கு தனித்தனியாக அணியை தயார் செய்யலாமா? இரண்டு கேப்டன்களை கொண்டு வரலாமா போன்ற ஆலோசனைகள் அந்த கூட்டத்தில் எடுக்க உள்ளது.

இதைப் போன்ற ராகுல் டிராவிட்டை ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கு பயிற்சியாளராகவும், லட்சுமணனை  டி20 பயிற்சியாளராக நியமிப்பது  குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் இஷான் கிஷன்,  சுப்மான் கில், சஞ்சு சாம்சன் போன்ற இளைஞர்களை எப்படி அணியில் பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

வீரர்கள் காயமடைவதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில்  அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனிடையே, இலங்கை தொடரும் நியூசிலாந்து தொடரும் அடுத்தடுத்து நடைபெறுகிறது. 29 நாட்கள் இடைவெளியில் 12 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் வீரர்கள் ஓய்வின்றி விளையாடுகிறார்கள். இதற்காக தனித்தனி அணிகளை பிசிசிஐ களம் இறக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -