2023 உலக கோப்பை மூத்த இந்திய வீரரை மீண்டும் கொண்டுவர பிளான் போடும் பிசிசிஐ ; அதிர்ச்சி தகவல்!

0
6814

2023 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் 13 வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது . இதற்கு முன்பு மூன்று முறை இந்தியா உலகக் கோப்பையை நடத்தி இருந்தாலும் அந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறிலங்கா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளும் இணைந்து நடத்தின. ஆனால் இந்த முறை இந்தியா மட்டும் உலகக்கோப்பை போட்டியை நடத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருப்பதால் சுழற் பந்துவீச்சாளர்களின் முக்கியத்துவம் பிரதானமாக இருக்கும். இந்திய அணியை பொறுத்த வரை வெள்ளை பந்து போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா,அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் யுசேந்திர சஹால் ஆகியோர் சுழற் பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் ஆல் ரவுண்டர்களாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை கடைசியாக icc போட்டிகளில் 2013 ஆம் ஆண்டு மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது அதன் பிறகு நடைபெற்ற இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் ஒரு சாம்பியன் டிராபி மற்றும் நான்கு டி20 உலக கோப்பை போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதில் ஒரு உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது .

இதன் காரணமாக இந்த வருடம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றதாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் இந்த உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய அணியின் மீது நெருக்கடியும் அதிகமாக இருக்கிறது . இதனால் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாக குழுவினர் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான திட்டங்களை தீவிரமாக வகுத்து வருகின்றனர் .

இந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளரும் ஆல் ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்க இருப்பதாகவும் பிசிசிஐக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன. ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு அனுபவம் வாய்ந்த சுழற் பொந்து வீச்சாளராக இருப்பதோடு அவரிடம் மாடர்ன் கிரிக்கெட் இருக்கு தேவையான வேரியேசன்களும் இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடர்களிலும் அவர் சிறப்பாக பதிவுகளை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இரண்டு வீரர்களும் ஒரே மாதிரியான பந்துவீச்சை கொண்டிருக்கக் கூடிய வீரர்கள் இவர்களில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படும் போது அவர் ஒரு ஆப் ஸ்பின்னர் ஆக இருக்கிறார். மேலும் இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டம் இழப்பு தரவுகளையும் வைத்திருக்கிறார். இது போன்ற காரணங்களால் உலகக் கோப்பை காண இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக பிசிசிஐயில் இருந்து வரும் நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவித்திருக்கின்றன .

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற டி20 உலக கோப்பை அணியிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி இருந்தார் . ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளை பொந்து போட்டிகளில் சரியாக வாய்ப்பு வழங்காமல் நேரடியாக அவரை உலகக்கோப்பை போட்டிகளில் களம் இறக்குவது இந்தியா அணிக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. தற்போதும் அதே போன்று ஒரு திட்டத்தை பிசிசியை செயல்படுத்துமா அல்லது உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பாக வெள்ளைப் பந்து போட்டிகளில் அஸ்வினுக்கு சில வாய்ப்புகளை கொடுத்து அதன் பிறகு அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.