50-ஒவர் உலககோப்பையில் இருக்கும் வீரர்கள் ஐபிஎல் விளையாட தடையா? – பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்கள் சந்திப்பு!

0
176

மும்பையில் ஐபிஎல் உரிமையாளர்களை அழைத்து பிசிசிஐ சந்துப்பு நடத்தி, வீரர்கள் குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

2023ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பை 15வது முறையாக நடக்கவுள்ளது. இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது. கடைசியாக 2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்தது, அதை இந்திய அணி கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்பிறகு 12 ஆண்டுகளாக ஐசிசி உலககோப்பையை இந்திய அணி கைப்பற்றவில்லை. இது பிசிசிஐ-க்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே இதற்கான திட்டத்தில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இந்திய அணியும் வெற்றியுடன் 2023ம் ஆண்டை துவங்கியுள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை ஒருநாள் தொடர்களில் வீழ்த்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் நேரடியாக இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளின்போது முன்னணி வீரர்கள் சிலர் காயம் அடைந்து விடுகின்றனர். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் அவர்களால் விளையாட முடியாமல் போகிறது. குறிப்பாக இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு இப்படி நடப்பதால் மிகப்பெரிய தொடர்களில் இந்தியாவிற்கு பின்னடைவாக அமைந்துவிடுகிறது. உதாரணமாக, டி20 உலகக்கோப்பையையில் பும்ரா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் விளையாடமுடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் 50-ஓவர் உலகக் கோப்பை வரவிருக்கிறது. இந்த 50-ஓவர் உலகக்கோப்பை திட்டத்தில் இருக்கும் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பொழுது காயம் அடைந்து விடக்கூடாது. இதனால் இந்திய அணி பின்னடைவை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது.

அதாவது ஐபிஎல் அணி உரிமையாளர்களை அழைத்து, சந்திப்பு நடத்தி, அவர்களிடம் வீரர்களின் உடல்நிலை மற்றும் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஐபிஎல் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பேசப்பட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

பிசிசிஐ கீழ் வரும் இந்திய தேசிய அகடமி இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு வீரர்களை ஐபிஎல் போட்டிகளின் போது கண்காணிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அவர்களது உடல்நிலை மற்றும் பணிச்சுமையில் தடங்கல்கள் வந்தால் உடனடியாக பிசிசிஐ தலையிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு வீரர்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது என கூறப்பட்டிருக்கிறது.