ஹர்திக் பாண்டியவை நம்பி பயனில்லை ; அவரது இடத்தில் வேறொரு ஆல்ரவுண்டரை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு

0
74
Hardik Pandya Selection

உலக கோப்பை டி20 தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. ஒரு பக்கம் இந்த சோகத்தில் இந்திய ரசிகர்கள் ஆழ்ந்திருக்க, அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பிசிசிஐ தற்பொழுது ஒரு பதிவிட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.

அந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா டி20 அணியின் புதிய கேப்டனான ரோஹித் ஷர்மா தலைமையில் 16 வீரர்கள் கொண்ட பட்டியலில் சில பல மாற்றங்கள் உள்ளன. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் இல்லாதது குறித்து வந்த தகவல்

பிசிசிஐ அறிவித்த அந்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் இல்லை. ஒருபுறம் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட காரணத்தினால் அவரது பெயர் இடம்பெறவில்லை என்று ஒரு சிலர் கூறி வரும் நிலையில், மறுபுறம் அவரை ஆல்ரவுண்டர் வீரராக பிசிசிஐ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஹர்திக் பாண்டியா சமீப நாட்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம அளவில் விளையாடுவதில்லை.

இந்திய தேர்வுக்குழுவிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஒரு பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியாவை எந்த ஒரு தொடரிலும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. மீண்டும் அவர் எப்பொழுது முன்பு போல பந்து வீசுகிறாரோ, அப்பொழுது தான் அவரை மீண்டும் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டர் வீரர் என்கிற இடத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.

ஹர்திக் பாண்டியா இடத்தில் வெங்கடேஷ் ஐயரை விளையாட வைக்க முடிவு செய்துள்ள இந்திய நிர்வாகம்

அதுவரை ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் வேறு ஒரு பௌலிங் வீசக்கூடிய பேட்ஸ்மேனை விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயரை விளையாட வைக்க பிசிசிஐ தற்பொழுது முடிவு செய்துள்ளது.

நன்கு அதிரடியாக பேட்டிங் விளையாடக்கூடிய அவர் சில ஓவர்கள் பவுலிங் வீசுவதிலும் திறமை பெற்றவர். உள்ளூர் போட்டிகளில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறார். நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 370 ரன்கள் குவித்திருக்கிறார். அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 41.11 ஸ்ட்ரைக் ரேட் 128.47 ஆக இருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் வெங்கடேஷ் ஐயர் எப்படி விளையாடப் போகிறார் என்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கண்காணிக்க போகிறது.

அவருடைய ஆட்டம் பொருத்து இனி வரும் நாட்களில் அவரைத் தொடர்ந்து விளையாட வைக்கவும் பிசிசிஐ ஒரு பக்கம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயமாக ஹர்திக் பாண்டியா இடத்தில் வெங்கடேஷ் ஐயர் தன்னுடைய முழு திறமையை வெளிப் படுத்துவார் என்று விமர்சகர்கள் மற்றும் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.