இந்திய அணியின் முக்கிய பொறுப்பில் தோனி – பிசிசிஐ தரப்பு தகவல்!

0
4546

தோனியை இந்திய அணியின் முக்கிய பொறுப்பில் நியமிப்பதற்கு பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நிர்வாகமாக இருந்து வருவது பி சி சி ஐ என அழைக்கப்படும் இந்திய அணியின் நிர்வாகம்தான். பொருளாதார ரீதியிலும், அதிக அளவில் திறமையான வீரர்களை கொண்டிருக்கும் வகையிலும் முன்னணியில் இருக்கிறது.

டி20 போட்டிகளில் புதிய புரட்சியை கொண்டுவர ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரை நடத்தி வரும் இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம், பல திறமையான வீரர்களை உருவாக்கி இருக்கிறது. ஆனால் ஐசிசி கோப்பைகளை வெல்லும் அளவிற்கு அவை இல்லையோ? என்ற சந்தேகங்கள் நிலவுகிறது.

ஏனெனில் கடந்த 10 வருடங்களாக எவ்வித ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை.

இதை முடிவுக்கு கொண்டு வர, இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து அனைத்து ஐசிசி கோப்புகளையும் பெற்றுத் தந்த தோனியை இந்திய அணியின் முக்கிய பொறுப்பில் நியமித்து எதிர்கால வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

வெளியாகிய தகவலின் படி, மூன்றுவித போட்டிகளுக்கும் ஒரே பயிற்சியாளர் இருப்பது கூடுதல் வேலைப்பளுவை கொடுக்கிறது. இதன் காரணமாக ஐசிசி போட்டிகளில் சரிவர செயல்பட முடியவில்லை.

இதனை குறைப்பதற்கு டி20 போட்டிகளில் பிரத்தியேகமாக தோனியை முழு பொறுப்பில் நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக டி20 போட்டிகளின் இயக்குனராக தோனியை நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மிகக் குறுகிய காலம் என்பதால் அதற்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்த பிசிசிஐ, தற்போது இத்தகைய முடிவை 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நோக்கில் கொண்டு எடுத்திருக்கிறது.

மேலும் வெளிவரும் தகவலின்படி, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாகவும் அதற்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.