அஸ்வினுக்கு செய்த அதே தப்பு.. கோலிக்கு செய்ய காத்திருக்கும் பிசிசிஐ.. உலககோப்பை கிடைக்காதா?

0
362
Virat

ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் வந்த பிறகு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டு உலகக் கோப்பைகளை இந்திய அணி சந்தித்து விளையாடியிருக்கிறது.

இந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் டி20 கிரிக்கெட்டில் அரை இறுதியிலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து சாம்பியன் பட்டம் வெல்வதை இழந்தது.

- Advertisement -

இந்தத் தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒரு முக்கிய வேலையை செய்தது. அது என்னவென்றால் ரவிச்சந்திரன் அஸ்வினை அணிக்கு உள்ளே கொண்டு வந்தது.

ஆனால் அவரை வீட்டிலிருந்து பயிற்சி எடுக்க விட்டு தான் இருமுறையும் உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள். எந்த இடத்திலும் அவருக்கு முன்கூட்டியே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் விளையாட வாய்ப்புகள் கொடுத்து தயார் செய்யவில்லை.

- Advertisement -

எவ்வளவு பெரிய சாம்பியன் பிளேயராக இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட கிரிக்கெட் ஃபார்மெட்டில் விளையாடுவதற்கு, சில சர்வதேச போட்டிகளை பயிற்சியாக கொடுப்பது அவசியம். இந்த தவறை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தொடர்ந்து இரண்டு பெரிய போட்டிகளில் செய்தார்கள்.

தற்பொழுது விராட் கோலியை இந்திய டி20 அணியில் சேர்ப்பதா வேண்டாமா என்கிற ஒரு பெரிய பேச்சு வார்த்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் நடந்து வருவதாக வெளியில் செய்திகள் வருகின்றன.

ஒருவேளை அவரை வருகின்ற டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்வார்கள் என்றால் அது சரியான விஷயம்தான். தேர்வு செய்வது உறுதி என்றால் அடுத்து இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதை டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஐபிஎல்-ன் தரமும், சர்வதேச டி20 கிரிக்கெட் இன் தரமும் வேறு வேறானது. இரண்டையும் ஒரே தராசில் வைக்க முடியாது. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு செய்த தவறை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விராட் கோலிக்கும் செய்யக்கூடாது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

- Advertisement -