கடும் அதிருப்தியில் பிசிசிஐ; அதிரடி மாற்றங்கள்!

0
1719
Bcci

சமீபத்திய ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தொடர் தோல்வியால் பிசிசிஐ நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளது இது தொடர்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கு பின் மறு ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது .


2021 இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி 2022 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தோல்விகளை சந்தித்து வருகிறது முதலில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை இழந்தது அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலவில்லை ஐசிசி உலக கோப்பை டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி உடன் அரை இறுதியில் மோசமான தோல்வியை சந்தித்தது அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட நியூசிலாந்து பயணத்தின் போது டி20 போட்டிகளை வெற்றி பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் ஒயிட் வாஷ் ஆவது மழையினால் தப்பித்தது என்றே கூறலாம் அதன்பின் தற்பொழுது வங்கதேச அணியுடன் போட்டியிலும் தொடரை இழந்துள்ளது .

இதனால் இந்திய அணியின் மீதும் அணி நிர்வாகத்தின் மீதும் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது . இந்திய அணி பங்களாதேஷ் தொடருக்கு செல்வதற்கு முன்பாகவே பி சி சி ஐ இன் நிர்வாகிகள் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் ‘விராட் கோலி’ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ‘வி வி எஸ் லக்ஷ்மன்’ ஆகியோரை சந்திக்க இருந்தனர் . ஒரு சில முக்கிய நிர்வாகிகள் வேறு பணிகளில் இருந்ததால் அந்தக் கூட்டத்துடன் ஒத்திவைக்கப்பட்டது .

தற்பொழுது வங்கதேச தொடருக்கு பின் அந்தக் கூட்டம் நடைபெறும் என்று ‘பிசிசிஐ’ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார் . இது குறித்து கூறிய அவர் ” கடந்த ஓராண்டுகளாக இந்திய அணியின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அளவில் பெற்ற வெற்றி என்றால் அது இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் வெற்றி தான் மற்ற வெற்றிகளை எல்லாம் வலு குறைந்த அணிகளிடம் பெற்ற வெற்றிகளாகத்தான் இருக்கின்றன . அடுத்த வருடத்தில் உலக கோப்பை நடக்க இருப்பதால் இதனை இப்பொழுதே சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது” என்று கூறினார் .

மேலும் இது குறித்து பேசியவர் ” இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் . ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்ற தவறியதாலும் ரோகித் சர்மாவின் ‘பேட்டிங் ஃபார்ம் ‘ கேப்டன் பதவியின் அழுத்தத்தினால் சரியாக இல்லை . இதனால் அவர் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படலாம் ” என்றும் தெரிவித்தார் .. மேலும் ஒரு நாள் போட்டிக்கான உலகக்கோப்பை வரை ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்றும் தெரிவித்தார் .

‘பிசிசிஐ’ நிர்வாகத்தின் மற்றொரு அதிருப்தியாக வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் பிரச்சனை உள்ளது. இது தொடர்பாகவும் அந்தக் கூட்டத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ‘வி வி எஸ் லட்சுமணன்’ உடன் கலந்த ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.