அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு பிசிசிஐ கொடுத்த சலுகை – கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் பழைய அணிகள்

0
122
IPL 2022

உலகக் கோப்பை டி20 தொடர் ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த வருடம் சமீப சில வருடங்களில் போல 8 அணிகள் இல்லாமல் மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்று விளையாட போகின்றன.சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத், லக்னோ மற்றும் அகமதாபாத் என மொத்தமாக 10 அணிகள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட போகின்றன.

பிசிசிஐ தரப்பில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஏலத்தில் 2 புதிய அணிகள் ஆன அகமதாபாத் மற்றும் லக்னோ அணியை சிபிசி கேப்பிட்டல் மற்றும் ஆர் பி சஞ்சீவ் கோயங்கா நிறுவனங்கள் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியது. இனி அடுத்ததாக அனைத்து அணைகளுக்கும் இந்தாண்டு இறுதியில் ஒரு மெகா ஏலம் நடைபெற இருக்கின்றது

- Advertisement -

புதிய அணிகளுக்கு சிறப்பு சலுகையை கொடுத்துள்ள பிசிசிஐ

தற்போது உள்ள 8 அணிகள் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து அதிகபட்சமாக 3 அல்லது 4 வீரர்களை மட்டுமே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் அனைவரும் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்யலாம்.

பழைய 8 அணிகளும் மூன்று அல்லது நான்கு வீரர்களை முன்கூட்டியே தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ முன்கூட்டியே கூறியிருந்தது. அதே போல தற்பொழுது பிசிசிஐ புதிய அணிகளுக்கு ஒரு சலுகை கொடுத்துள்ளது. மெகா ஏலத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே தங்களுக்கு விருப்பப்பட்ட எந்த 3 வீரர்களை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து கொள்ளக்கூடிய உரிமையை, பிசிசிஐ தற்போது இந்த இரண்டு புதிய அணி நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ கொடுத்துள்ள புதிய சலுகையில் விருப்பமில்லாத பழைய அணிகள்

அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் எந்த 3 வீரர்களை வேண்டுமானாலும் ஏலத்திற்கு முன்பாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது பழைய அணிகளுக்கு விருப்பம் இல்லாதது போல் தற்போது தெரியவந்துள்ளது. பழைய அணி நிர்வாகங்கள் பிசிசிஐ இடம் இதுபற்றி கலந்துரையாடவும் நிறைய வாய்ப்பு உள்ளது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எனவே அனைத்து அணி நிர்வாகங்களுக்கும் ஏற்றார் போல புதிய விதிமுறையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -