இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் ஹர்திக் பாண்டியா பெயர் இடம் பெறவில்லை – ரசிகர்களின் கேள்விக்கு சேட்டன் ஷர்மா விளக்கம்

0
353
Chetan Sharma about Hardik Pandya Selection

இந்திய அணியில் சமீப காலத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு ஆல்ரவுண்டர் வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான். மிக அதிரடியாக விளையாடி சிக்சர் அடிப்பது அதேசமயம் அற்புதமாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுவது என மிக அற்புதமாக விளையாடி கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் மிகப் பெரிய காயம் ஏற்பட்டது. காயத்தை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் மீண்டும் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் விளையாடினாலும், முன்பு விளையாடியது போல் அவரால் விளையாட முடியவில்லை. குறிப்பாக அவர் முன்புபோல இயல்பாக பந்துவீச தயாராகவில்லை. கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடினார். இருப்பினும் அவ்வளவாக அவர் பந்து வீசவில்லை.

- Advertisement -

இதனை தொடர்ந்து தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளவும், முன்பு போல மீண்டும் பந்துவீச தன்னை தயார் படுத்திக்கொள்ள காலவரையற்ற ஓய்வு அறிவித்திருந்தார். அதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்தது. அதனடிப்படையில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் கூட ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெறவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் ஹர்திக் பாண்டியா பெயர் இடம்பெறவில்லை

வருகிற பிப்ரவரி 24ம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது. இந்த இரண்டு தொடரிலும் ஹர்திக் பாண்டியா பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் வீரர்களாக தீபக் ஹூடா மற்றும் வெங்கடேஷ் ஐயர் பெயர் இடம் பெற்றுள்ளது.

பிசிசிஐ தலைமை தேர்வாளரான சேட்டன் ஷர்மா இது சம்பந்தமாக தற்பொழுது ஒரு விளக்கம் அறிவித்திருக்கிறார். அவர் கூறிய விளக்கத்தில் “ஹர்திக் பாண்டியா தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா எவ்வளவு முக்கியமான ஒரு வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் வீரராக அவர் முன்புபோல பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாட வேண்டும். எனவே அவர் முழுமையாக தயாராகும் பட்சத்தில் அப்பொழுது மீண்டும் இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதுவரையில் தற்போது இந்திய அணியில் வெங்கடேஷ் மற்றும் தீபக் ஆகியோர் அவரது பணியை சரிவர செய்வார்கள் என்று நாம் நம்பலாம். மறுபக்கம் வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் பேட்டிங்கில் சில நாட்களாகவே அதிரடியாக விளையாடி வருகிறார்கள். எனவே ஹர்த்திக் பாண்டியா இல்லாத வெற்றிடத்தை இவர்கள் சுலபமாக நிரப்பி விடுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.