உம்ரான் மாலிக்கை தயாராக இருக்கச் சொன்ன பிசிசிஐ; வருகிறது பெரிய மாற்றங்கள்!

0
518
Ind vs Sa

ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கின்ற டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வு குழு அறிவித்த பொழுது மிகப்பெரிய விமர்சனங்கள் எழுந்தது முகமது சமிக்கு ஏன் 15 பேர் கொண்ட அணியில் இடம் இல்லை என்றுதான்.

மேலும் ஆசிய கோப்பை அணியிலும் முகம்மது சமிக்கு இடம் அளிக்கப்படவில்லை. அந்தத் தொடரில் ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இல்லாத காரணத்தால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என்பது உண்மை. இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் முகமது சமியைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

- Advertisement -

இதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் டி-20 உலகக்கோப்பை திட்டத்தில் முகமது சமி இல்லை என்றாலும், அவரை அணிக்குள் சேர்த்தே ஆகவேண்டிய சூழல் உருவாகியது. இதனால் வேறு வழி தெரியாத இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அவரை 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்க்க விட்டாலும், ரிசர்வு வீரராக சேர்த்தது.

மேலும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முகமது சமிக்கு இடம் அளிக்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு அவரால் விளையாட முடியாமல் போனது.

இதையடுத்து நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் துவங்கியிருக்கும் டி20 தொடரின் முதல் போட்டியில் முகமது சமி இருப்பாரா என்ற உறுதி எதுவுமில்லை. இதுபற்றி பெயர் வெளியிடாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்
” சமி மற்றும் அவரது உடல்நிலை குறித்து எனக்கு எந்த தகவல்களும் உறுதியாக தெரியவில்லை. மருத்துவக் குழுவிடம் தான் அது பற்றிய முழு தகவல்கள் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடரில் சமி விலகி இதையடுத்து உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். அப்பொழுது இவருக்கு பதிலாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இளம் வீரர் இம்ரான் மாலிக்குக்கு அணியில் இடம் தந்திருக்க வேண்டும் என்ற பேச்சு உருவானது. தற்போது தனது தவறை உணர்ந்த இந்திய கிரிக்கெட் வாரியம் உம்ரான் மாலிக்கை தென்ஆப்பிரிக்க தொடருக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிராக அறிமுகமான மாலிக் 3 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதற்கடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.