இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு அறிவிப்பு-தமிழக வீரருக்கு இடம்!

0
5914

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பெற்ற அதிர்ச்சி தோல்வியை அடுத்து இந்தியா அணியின் தேர்வு குழுவானது அதிரடியாக கலைக்கப்பட்டது . உலகக் கோப்பை இந்திய அணியின் தேர்வில் ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன . இதனை அடுத்து இந்திய அணியின் தோல்வியின் எதிரொலியாக இந்திய தேர்தல் குழுவை கலைத்தது பிசிசிஐ .

புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து 600 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அவற்றிலிருந்து 11 பேரை தேர்ந்தெடுத்து நேர்காணலுக்கு அழைத்திருந்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

திருமதி சுலக்ஷனா நாயக், திரு அசோக் மல்ஹோத்ரா மற்றும் திரு ஜதின் பரஞ்சப்பே ஆகியோர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்று நேர்காணலை நடத்தியது . இந்த நேர்காணலின் இறுதியில் அவர்கள் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து பிசிசிஐ க்கு பரிந்துரை செய்துள்ளனர்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு தற்போதைய இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா தொடர்ந்து தலைவராக நீடிக்க பரிந்துரை செய்துள்ளது . மேலும் இந்திய தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த ஒரிசாவை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சிவ் சுந்தர் தாஸ் தற்போதைய புதிய தேர்வுக்குழுவிலும் இடம் பெற்றுள்ளார் . இவர்கள் தவிர பீகாரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சுப்ரடோ பானர்ஜி மற்றும் மும்பையைச் சார்ந்த இந்திய அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரும் மும்பை ரஞ்சி அணியின் தேர்வு குழு தலைவராக இருந்து வந்த சலீல் அங்கோலா மற்றும் தமிழகத்தைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் சரத் ஆகியோரும் புதிய தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சலீல் அங்கோலா இந்திய அணிக்காக 20 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரடோ பானர்ஜி இந்திய அணிக்காக 6 ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆடி இருக்கிறார். சிவ் சுந்தர் தாஸ் இந்திய அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளிலும் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் ஆடி இருக்கிறார் . தேர்வு குழுவின் மற்றொரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சார்ந்த ஸ்ரீதரன் சரத் தமிழக அணிக்காக 139 ரஞ்சிப் போட்டிகளில் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாடவிருக்கும் போட்டி தொடர்களில் இருந்து தங்களின் பணியை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த தேர்வு குழுவின் புதிய உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கையை பிசிசிஐ யின் அதிகாரப்பூர்வ பீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செயலாளர் ஜெய்ஷா.