ஏதேனும் ஒரு வீரர் கொரோனா விதிகளை மீறினால் ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக நீக்கப்படுவர் – பிசிசிஐ கொண்டுவந்துள்ள அதிரடி விதிமுறைகள்

0
65
Virat Kohli and Jasprit Bumrah

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வருகிற மார்ச் 26ஆம் தேதி அன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மார்ச் 26ம் தேதி துவங்கி மே மாதம் 22ஆம் தேதி வரை மொத்தமாக 70 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 70 ஆட்டங்களில் 58 போட்டிகள் இரவு 7:30 மணி அளவில் நடைபெற இருக்கின்றது. மீதமிருக்கும் 12 ஆட்டங்கள் பகலிரவு போட்டிகளாக 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

லீக் சுற்றிலுள்ள அனைத்துப் போட்டிகளும் மும்பையில் உள்ள வான்கடே,பிரபோர்ன், டிஒய் பட்டில் மற்றும் புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்று நடந்து முடிந்த பின்னர் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய விதி முறையை கொண்டு வந்துள்ள பிசிசிஐ

ஐபிஎல் தொடர் நடைபெறுமா இருப்பதை தொடர்ந்து பிசிசிஐ தற்பொழுது முக்கிய விதிமுறையை முன்னெடுத்து வந்துள்ளது. பிசிசிஐயின் நிபந்தனைப்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணி வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் அனைவரும் ஐபிஎல் தொடர் ஆரம்பம் முதல் ஐபிஎல் தொடரின் இறுதிவரை பயோ பபுளில் இருக்க வேண்டும்.

விதிமுறை ஒன்று :

ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் ஏதேனும் ஒரு வீரர் பயோ பபுள் விதிமுறையை மீறி பயோ பபுளிலிருந்து வெளியேறினால் அந்த வீரர் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். இந்த ஏழு நாட்களில் அவருக்கு போட்டி வருமானம் கொடுக்கப்படாது.

மீண்டும் அதே தவறை அந்த வீரர் இரண்டாவது முறையாக செய்தால், அவர் இந்த முறை தனிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவார்.

அந்த வீரர் மீண்டும் அதே தவறை மூன்றாவது முறையாக செய்யும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்.

விதிமுறை இரண்டு :

இரண்டாவது விதி முறையின்படி ஏதேனும் ஒரு அணி வெளிநபரை அல்லது வெளி பார்வையாளரை அனுமதியின்றி அந்த அணியின் பயோ பபுளுக்குள் அனுமதித்தாள் அந்த அணிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இதே தவறை அந்த அணி இரண்டாவது முறை செய்யும் பட்சத்தில் அந்த அணி பெற்ற புள்ளிகளிலிருந்து ஒரு புள்ளி எடுத்துக் கொள்ளப்படும். இதே தவறை மூன்றாவது முறையாக அந்த அணி செய்யும் பட்சத்தில் இம்முறை இரண்டு புள்ளிகள் எடுத்துக் கொள்ளப்படும்.

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு விதிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்படும். அதில் எந்தவித மாற்றமும் இறுதி நேரத்தில் இருக்காது என்று பிசிசிஐ கூறியுள்ளது.