ஹர்திக் பாண்டியா கேப்டன் ; புதிய 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு – அயர்லாந்து டி20ஐ தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

0
440
Hardik Pandya Indian team

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மூன்று போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டில் வெற்றி கண்டுள்ளது இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி கண்டுள்ளது. இறுதிப் போட்டி வருகிற ஜூன் 19-ம் தேதி அன்று நடைபெறுகிறது.

இந்த டி20 தொடருக்கு பின்னர் இந்திய அணி ஜூன் மாதம் 26 மற்றும் 28ஆம் தேதியன்று அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாட போகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதற்கு முன்னர் இந்த இரு டி20 போட்டிகளில் இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று விளையாட உள்ளது குறிப்பிடதக்கது.

- Advertisement -
பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா விராட் கோலி ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அயர்லாந்து அணிக்கு எதிரான இந்த இரண்டு டி20 போட்டிகளிலும் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல அயர்லாந்து அணிக்கு எதிரான அணியில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறவில்லை.

நெடுநாள் காத்திருப்புக்கு கிடைத்த பலனாக முதல்முறையாக ராகுல் திரிபாதி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில், சஞ்சு சாம்சனுக்கும் இந்த முறை அயர்லாந்து அணிக்கு எதிராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த போகிறார். அவரது தலைமையில் குஜராத் அணி கோப்பையை வென்றதை தொடர்ந்து, அவரை நம்பி பிசிசிஐ இந்த பொருட்களை தற்போது அவருக்கு கொடுத்துள்ளது. துணைக் கேப்டனாக புவனேஸ்வர் குமார் செயல்படப் போகிறார்.

- Advertisement -
அயர்லாந்து டி20ஐ தொடருக்கான இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.