20 ஓவர் 349 ரன்.. உலக சாதனை படைத்த பாண்டியா பிரதர்ஸ் டீம்.. மெகா வித்தியாச வெற்றி.. SMAT 2024

0
658
SMAT

தற்போது நடைபெற்று வரும் இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி டிராபியில் பரோடா அணி சிக்கிம் மணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 349 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறது.

இந்திய உள்நாட்டு டி20 தொடர் சையத் முஸ்டாத் அலி டிராபி கடந்த வாரம் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா விளையாடும் க்ருனால் பாண்டியா தலைமை தாங்கும் பரோடா அணி சிக்கிம் அணிக்கு எதிராக உலக டி20 வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது.

- Advertisement -

பரோடா அணியின் உலக சாதனை

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா பரோடா அணிக்கு விளையாடவில்லை. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பரோடா அணிக்கு முதல் விக்கட்டுக்கு ஐந்து ஓவர்களில் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது.

இந்த போட்டியில் பரோடா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சஷ்வத் ராவத் 16 பந்தில் 43 ரன், அபிமன்யு சிங் 17 பந்தில் 53 ரன்கள் என அதிரடியான அடித்தளத்தை கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த பானு பணியா வெறும் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 134 ரன்கள் குவித்து மிரட்டினார்.

- Advertisement -

இத்தோடு நிற்காமல் அடுத்து வந்த சிவாலிக் சர்மா வெறும் 17 பந்தில் 55 ரன், வி.சோலங்கி 16 பந்தில் 50 ரன்கள் எடுத்து பரோடா அணியின் மொத்தத்தை அதிரடியாக உயர்த்தினார்கள். 20 ஓவர்கள் முடிவில் பரோடா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. சிக்கிம் பந்துவீச்சில் பல்சோர் தமங் மற்றும் ரோஷன் குமார் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பிரம்மாண்ட ரன் வித்தியாசம்

இதைத் தொடர்ந்து விளையாடிய சிக்கிம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ரோபின் லிம்போ 20 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இறுதியாக பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : கவாஸ்கர் பணம் வாங்கிட்டு இப்படி பேசக்கூடாது.. ரொம்ப வேடிக்கையா இருக்கு – டிராவிஸ் ஹெட் விமர்சனம்

இதுவரையிலான ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் காம்போ அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி சமீபத்தில் 344 ரன்கள் எடுத்தது ஒரு இன்னிங்ஸில் டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்பொழுது இதை சிக்கிம் அணிக்கு எதிராக 349 ரன்கள் குவித்து பரோடா அணி உடைத்திருக்கிறது.

- Advertisement -