விராட் கோலியை வம்பிழுத்த பங்களாதேஷ் வீரர்கள் ; கடுப்பான கோலி ; வீடியோ இணைப்பு!

0
635
Viratkohli

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மிக முக்கியமான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது!

ஏன் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதியை எட்ட இந்தத் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம்.

இந்த காரணத்தால் பங்களாதேஷ் அணியுடன் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருக்க, இரண்டாவது போட்டி மூன்று நாட்கள் முன் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 227 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 231 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருக்கிறது!

ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமா இருக்கிறது. இந்த நிலையில் 145 என்ற இலக்கே கொஞ்சம் கடினம்தான். இந்த நிலையில் இன்று இறுதி சஷனில் விளையாடிய இந்திய அணி 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. அக்சர் பட்டேல் மற்றும் உனட்கட் இருவரும் களத்தில் இருக்கிறார்கள்!

இந்த நிலையில் நான்காவது விக்கட்டாக மெகதி ஹசன் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டம் இழந்தார். அப்பொழுது பங்களாதேஷ் அணியின் விக்கெட் வெற்றி கொண்டாட்டத்தின் போது அவர்கள் ஏதோ வார்த்தையை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த விராட் கோலி களத்தில் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு நடுவரை அழைத்து புகார் செய்து கடும் கோபத்தோடு வெளியேறி சென்றார்.

விராட் கோலி வழக்கமாக களத்தில் ஆக்ரோசமாக இருப்பார் ஆனால் அவர் அதற்கென்று ஒரு அளவு, முறை வைத்திருப்பார். மிகவும் தவறான வார்த்தைகளை எதிரணி நோக்கி பேச மாட்டார். அவரைப் போலவே யாராவது அவரிடம் செய்யும்பொழுது அதை அவர் கண்டு கொள்ள மாட்டார். இன்று அளவுக்கு மீறி பங்களாதேஷ் வீரர்கள் ஏதோ செய்யத்தான் விராட் கோலி கடுப்பாகி இருக்கிறார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!